வட கிழக்கின் முதலாவது கைப்பணித் தொழிற்பேட்டைஇன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்கோப்பாய் வடக்கு இலகடி என்ற பகுதியில் இந்த கைத்தொழில் பேட்டை, தாயக நேரப்படி இன்றுகாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த கைத்தொழில் பேட்டையில் 30 பேர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதுடன்,மூன்று மாதங்களில் 100 பேருக்கான வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.
நவீனஇயந்திரங்களுடன் கூடிய இந்த கைத் தொழில் பேட்டையில் சித்திரம், தையல், புடைப்புச் சித்திரம்,கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்குஉரையாற்றிய ஐ.பி.சி தமிழ் நிறுவனத் தலைவர் கந்தையா பாஸ்கரன், இன்னும் போர் ஒயவில்லைஎனவும் தொழிலுக்கான போர் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கூறினார்.
தமிழர்தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் கைத்தொழில் பேட்டைகள் நிறுவப்படுவதன் மூலம், வேலைவாய்ப்புக்கள்பெற்றுக்கொடுப்பதுடன், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களின் பொருளாதாரம் கட்டியெழுப்படும்எனவும் குறிப்பிட்டார்.
வடமாகாண கைத் தொழில் திணைக்களப் பணிப்பாளர் ஸ்ரீமோகன், வலி கிழக்கு பிரதேச செயலாளர்,தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலர்கலந்துகொண்டனர்.
அயல்பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றிருந்தன.