இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ளது. ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டித் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 3-வது ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவுக்கு அதிரடி எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா!
வடகொரியாவின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு அவுஸ்திரேலியா தனது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்கா பென்டகனிலுள்ள அணுஆயுத மற்றும் ஏவுகணை எதிர்ப்புப்பொறிமுறை குறித்த முன்னாள் உயர் அதிகாரி Dr Brad Roberts கூறியுள்ளார். அத்துடன் அவுஸ்திரேலியா மீது வடகொரியாவின் ஏவுகணை எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்!
கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். ‘இவன் தந்திரன்’ படத்திற்கு பிறகு கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ பட இயக்குனர் திரு இயக்கவிருக்கும் அந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ...
Read More »ஹூவாய் ஹானர்
ஹானர் 9 சிறப்பம்சங்கள்: – 5.15 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் – ஹைசிலிகான் கிரின் 960 சிப்செட் – 4 ஜிபி / 6 ஜிபி ரேம் – 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி – 20 எம்பி + 12 எம்பி பிரைமரி கேமரா – 8 எம்பி செல்ஃபி கேமரா – பின்புறம் கைரேகை ஸ்கேனர் – 3200 எம்ஏஎச் பேட்டரி சமீபத்தில் வெளியான ஹானர் 8 ப்ரோ விலை ரூ.29,999 ...
Read More »அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார்!
ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா செல்லும் இங்கிலாந்து அணியுடன் பென் ஸ்டோக்ஸ் செல்லமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார். ஆக்ரோஷமாக விளையாடும் பென் ஸ்டோக்ஸ், மைதானத்திற்கு வெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதுண்டு. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய பின்னர், நள்ளிரவு கிளப் சென்றார். பின்னர் அங்குள்ள நபர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் காவல் துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பின் ...
Read More »போட்டோஷாப் பாடம்!
அடோபின் போட்டோஷாப் மென்பொருளால் ஒளிப்படங்களை எண்ணற்ற வழிகளில் மேம்படுத்தலாம். இதற்கு உதவும் நூற்றுக்கணக்கான நுணுக்கங்கள் உள்ளன. படங்களில் உள்ள வண்ணங்களில் விளையாடுவது போட்டோஷாப் நுணுக்கங்களில் பிரபலமானது. இதற்கான ஐந்து பிரத்யேக வழிகளை ட்விட் யூடியூப் வீடியோ, சேனல் வீடியோ மூலம் அழகாக விளக்கியுள்ளது. அட்ஜெஸ்ட்மெண்ட் லேயரை பயன்படுத்துவது, பெயிண்ட் பிரெஷை இணைத்து பயன்படுத்துவது என வழிகள் உள்ளன. வீடியோவில் கற்க: https://www.youtube.com/channel/UCeR7U67I2J1icV8E6Rn40vQ
Read More »உலக சாதனை படைத்த மனித நேயத்தை போற்றும் குறும்படம்!
சமீபத்தில் பேஸ்புக்கில் “மிஸ்டர் காப்ளர்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை சதீஷ் குருவப்பன் என்பவர் நடித்து, இயக்கி, தயாரித்துள்ளார். மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி இந்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. 1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த குறும்படத்தை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதுடன், 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதை இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் தெரிவித்திருக்கிறார். ...
Read More »அவுஸ்ரேலியர்களின் மரணத்திற்கு காரணம் இதுவே! வெளியான தகவல்
அவுஸ்ரேலியர்களின் அதிகளவான மரணத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களே காரணம் என சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவுஸ்ரேலியாவில் 2016ம் ஆண்டு மரணமடைந்தவர்களில் 12 வீதமானவர்கள் அதாவது 19,077 பேர் இதயநோய் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இரண்டாவது இடத்தில் Dementia ,Alzheimer’s ஆகியன காணப்படுகின்றன. 3ம் இடத்தில் பக்கவாதம் போன்ற cerebrovascular நோய்களும், 4ம் இடத்தில் புற்றுநோயும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More »டூயல் கேமராவுடன் ஹானர் 7X ஸ்மார்ட்போன்!
ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியிருக்கும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெய்போ தளத்தில் ஹானர் இதற்கான அறிவிப்பை பதிவிட்டுள்ளது. தற்போதைய டிரென்ட் பின்பற்றும் வகையில் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 டிஸ்ப்ளே அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படும் என ...
Read More »என்னுடைய முதல் சம்பளம் ரூ. 75: சல்மான்கான்
முதல் சம்பளமாக ரூ.75 வாங்கியதாக நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார். இந்தி திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ஆக திகழும் நடிகர் சல்மான்கான், படத்துக்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், இந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் சல்மான்கான் 2-வது இடத்தில் இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இது தவிர, டி.வி.யில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சி மொத்தம் 11 பாகங்களை கொண்டது. இதன் ஒவ்வொரு பாகத்துக்கும் சல்மான்கான் தலா ரூ.11 கோடி வரை சம்பளம் ...
Read More »