ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியாகியிருக்கும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிரான்டு 6X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 7X ஸ்மார்ட்போனினை அக்டோபர் 11-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெய்போ தளத்தில் ஹானர் இதற்கான அறிவிப்பை பதிவிட்டுள்ளது.
தற்போதைய டிரென்ட் பின்பற்றும் வகையில் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 18:9 டிஸ்ப்ளே அல்லது ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஹானர் முந்தைய வெளியீடான ஹானர் 6X ஸ்மார்ட்போனில் பின்புறம் டூயல் கேமரா வழங்கப்பட்ட நிலையில், புதிய ஸ்மார்ட்போனிலும் டூயல் கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் 3C சான்றிதழ் சார்ந்து வெளியான தகவல்களில் ஹானர் 7X ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் கரின் 670 சிப்செட், 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் EMUI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 6X ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கமரா, போக்கெ எஃபெக்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டிருக்கிறது. ஹானர் 6X ஸ்மார்ட்போன் 3ஜிபி மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டது.