குமரன்

பொது வெளியில் முரண்பட்டு மக்களை குழப்பாதீர்கள்!

தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயக கட்டமைப்பில் அனைவருக்கும் கருத்துவெளியிடும் உரித்துண்டு. அதனை கட்டுப்படுத்தவும் முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா நெருக்கடியால் ஒன்றுகூடிக் கலந்துரையாட முடியாத நிலைமைகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் ...

Read More »

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா?

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம் சரிந்துவிட்டது என்பது உண்மை.அமெரிக்க டொலரைக் காணமுடியவில்லை.ஆனால் நாங்கள் இன்னமும் பாணைச்  சீனியில் தொட்டு சாப்பிடும் ஒரு நிலைக்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன்.ஆனால் இன்னும் சில மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இந்திய யூடியூப்பர்களும் சில இணைய ஊடகங்களும் இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடியை குறித்து அதிகமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.இச்செய்திகள் உள்நோக்கத்தோடு மிகைப்படுத்தப்பட்டவை என்று இலங்கைத்தீவில் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ...

Read More »

ஜெனிவா:48 சொன்னதும் சொல்லாததும்!

மனித உரிமைப் பேரவையின் இந்த மாத 48வது அமர்வில் 46:1 இலக்கத் தீர்மானத்தின் முடிவுக்கிணங்க ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் முன்வைத்த வாய்மூல அறிக்கையை வழக்கம்போல இலங்கை அரசு நிராகரித்துள்ளது. சீனா அதற்கு பக்கப்பாட்டு வாசித்துள்ளது. கோதபாய அரசு செய்யத் தவறியவைகளையும் செய்ய வேண்டியவைகளையும் ஆணையாளரின் அறிக்கை பட்டியலிட அதில் சொல்லப்படாதவைகளை தமிழர் தரப்பு பட்டியலிடுகிறது. அப்படியானால் 49ம் 51ம் அமர்வுகளுக்கு முற்கூட்டியே அவ்விடயங்களை பேரவைக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு தமிழர் தரப்புக்கானது. இதனை செய்யத் தவறின் இதற்கும் தனியான பொறுப்புக்கூறல் தீர்மானம் தேவைப்படலாம். ...

Read More »

மக்கள் உண்ணக்கூட முடியாத நிலையில் மதுக்கடையைத் திறக்க யார் தீர்மானித்தது?

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பொது மக்களின் வரு மானங்கள் அனைத்தும் இழந்துள்ள நேரத்தில் மதுபான விற்பனை நிலையங் களைத் திறப்பதற்கான தீர்மானத்தை யார் எடுத்தது என்று ஐக்கிய தேசிய சுய தொழில் வர்த்தக சங்கம் அரசாங்கத்திடம் கேள்வி கேட்டுள்ளது. அரசியல்வாதிகளின் தேவையின் பேரில் மதுபான விற்பனை நிலையங்களைத் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அதன் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் ஊடக சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

Read More »

லொகான் ரத்வத்தையின் நடவடிக்கையால் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்கும் ஆபத்து

உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் மக்கள் நாட்டின் தேர்தல் முறைமீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்து நடந்துகொண்ட விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்துள்ளது. இவ்வாறான ...

Read More »

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள்

ஆஸ்திரேலியாவின் தற்காலிக விசாக்கள் கிடைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் ஆப்கானியர்கள் ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியாவுக்கு உதவிய 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் தற்காலிக விசாக்கள் கிடைத்தும், அந்நாட்டிலிருந்து வெளியேற முடியாத ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். காபூலில் செயல்பட்ட ஆஸ்திரேலிய தூதரகத்தில் பணியாற்றியவர்களும் ஆஸ்திரேலிய படையினருக்கு மொழி பெயர்ப்பாளர்களாக பணியாற்றியவர்களும் வெளியேற முடியாத நிலையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 27ம் தேதியுடன் நிறுத்தப்பட்ட வெளியேற்ற விமானங்களை அடைய முடியாததால் இவர்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது. சாம், அவ்வாறான தற்காலிக விசா பெற்ற ஆப்கானியர்களில் ஒருவர். கடந்த 6 ஆண்டுகளாக ...

Read More »

‘‘நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொன்று விட்டது’’

கடைசி நிமிடத்தில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து நியூசிலாந்து விலகியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தீவிர முயற்சியின் காரணமாக நீண்ட காலத்திற்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்தது. மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து அணி வீரர்கள் பாகிஸ்தான் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று(17) மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், ...

Read More »

விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தமான மகேஷ்பாபுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, விளம்பர படத்தில் நடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு புகையிலை நிறுவனத்தின் விளம்பர படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். புகையிலையை விளம்பரப்படுத்த தடை உள்ளதால் அந்த புகையிலை நிறுவனத்தின் வேறு ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் படத்தில்தான் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதில் மகேஷ்பாபு நடிக்க பலரும் எதிர்த்து வருகிறார்கள். சாய்பல்லவி ரூ.2 கோடி கொடுத்தும் முக அழகு கிரீம் விளம்பர படமொன்றில் நடிக்க மறுத்து விட்டார். ...

Read More »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் வரை நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (17) காலை கூடிய கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணி கூட்டத்திலே​யே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.

Read More »

பாக்- நியூசிலாந்து தொடர் இரத்து

பாகிஸ்தானுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கொண்டே இந்தத் தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.  இறுதி நேரத்தில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதை இட்டு மனவருத்தம் அடைவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  

Read More »