உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்க தீர்மானம்லொகான் ரத்வத்தை விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம்வேண்டுகோள் விடுக்கப்போவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பிரதிநிதிகள் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறி நுழைந்து கைதிகளை அச்சுறுத்தினால் மக்கள் நாட்டின் தேர்தல் முறைமீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.லொகான் ரத்வத்தை சிறைச்சாலைகளிற்குள் நுழைந்து நடந்துகொண்ட விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு நேற்று ஆராய்ந்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளால் சிறைக்கைதிகளின் மனித உரிமைகள் மீறப்படுவதுடன் மாத்திரமின்றி பொதுமக்கள் தேர்தல் முறை ஜனநாயகம் மீதான நம்பிக்கையை இழக்கும் ஆபத்துமுள்ளது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன் காரணமாக சபாநாயகரை உரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.