வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாகவும் ...
Read More »குமரன்
உங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபாருங்கள்
2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை அறிந்துகொள்ள, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இதற்கமைய, ஆணைக்குழுவின்www.election.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசிக்குமாறு பொதுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அறிந்தால், உடனடியாக உங்களது கிராம அலுவலரிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையாயின் 0112860031 அல்லது 0112860032 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More »பெருந்தொற்றுகளைத் தடுக்க என்ன வழி?
ஐக்கிய நாடு அவையின் சூழலியல் அமைப்புக்கான சமீபத்திய கருத்தரங்கில் தொற்றுநோய்ப் பரவலில் சூழலியல் சீர்கேடுகளின் பங்கு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில், “இத்தனை வருடம் தொடர்ச்சியாக நடந்த சீர்கேடுகளின் மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்கவிருக்கிறோம். கரோனா என்பது அதன் ஆரம்ப நிலை மட்டுமே; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் நான்கைந்து புதிய தொற்றுநோய்கள் உருவாகலாம். அதில் ஒன்று கரோனா போன்று சர்வதேசத் தொற்றுநோயாக மாறலாம்” என அறிக்கை விட்டிருக்கிறது. “சுற்றுச்சூழல் மீது சமீப காலங்களில் மனிதர்கள் நிகழ்த்திவரும் மிக மூர்க்கமான தாக்குதல்களின் விளைவு இப்படித்தான் ...
Read More »அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் அகதிகள் கலவரம்
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் முகாமின் கட்டிடங்களிற்கு தீ மூட்டியுள்ளனர். செவ்வாய்கிழமை இரவு இரண்டு கட்டிடங்கள் தீமூட்டப்பட்டன என தடுப்பு முகாமிற்குள் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. தடுப்புமுகாமின் கட்டிடமொன்றின் உச்சியில் இருவர் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முகாமில் தாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கோரினோம் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாங்;கள் கலவரத்தில் ஈடுபடவேண்டிய நிலையேற்பட்டது என அகதியொருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு வருடமாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோய் ...
Read More »இலங்கை பயன்படுத்தவுள்ள மருந்து எது?
இலங்கை பயன்படுத்தவுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஜனவரி 11ம் திகதிக்கு முன்னர் மக்களிற்கு தெரியப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள மருந்து மற்றும் அதனை வழங்குவதற்கான நடைமுறைகள் குறி;த்து மக்களிற்கு 11 ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை கொள்வனவுசெய்யும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கு பொறுப்பினை ஜனாதிபதி லலித் வீரதுங்கவிற்கு வழங்கியுள்ளார்.
Read More »யாழ். கல்லுண்டாயில் சுழல் காற்று; 9 வீடுகளுக்கு சேதம்
யாழ். கல்லுண்டாயில் இன்று வீசிய சுழல்காற்று காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இன்று(6) பிற்பகல் 1 மணியளவில் வீசிய சுழல் காற்றினால் குறித்த வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்தார். யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் ஜே – 136 நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில் இச்சுழல் காற்றின் தாக்கம் காரணமாக 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த ...
Read More »அஜித் படத்தில் சின்னத்திரை பிரபலம்
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹூமா குரேசி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் அஜித்துடன் நடிப்பவர்கள் பற்றிய விபரங்களை படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனிடையே, தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் ...
Read More »நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காத சீனா
சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்தது. இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் ...
Read More »விதார்த்தோடு இணைந்து நடித்த கார்
மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான விதார்த், அடுத்ததாக நடித்திருக்கும் படத்தில் காரும் இணைந்து நடித்து இருக்கிறது. செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம். இப்படம் குறித்து இயக்குனர் கே எல் கண்ணன் கூறும்போது, ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும், டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது. ...
Read More »நடிகராக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாம்ஸ். இவருடைய மகன் தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் யோஹன் நடிப்பு பயிற்சியும், இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க ...
Read More »