மட்டக்களப்பு குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்திலிருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16 மீட்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக காகித ஆலை விசேட அதிரடிப்படையுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, இவ்வாறான குண்டுகள், ஆயுதங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இவ்வாறான குண்டுகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் தொடர்பில் ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியா – தென் கொரியா இடைய 717 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு ஒப்பந்தம்
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் ஆகியோர் 717 மில்லியன் அமெரிக்க டொலர் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுமார் 1 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் பெறுமதியான இந்த ஒப்பந்தம் திங்களன்று கான்பெர்ராவிற்கான மூனின் நான்கு நாள் பயணத்தின் போது கைச்சாத்திடப்பட்டது. கொவிட் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தென் கொரிய ஜனாதிபதி ஆவார். புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தென் கொரிய பாதுகாப்பு நிறுவனமான ‘Hanwha’ அவுஸ்திரேலியா இராணுவத்திற்கு பீரங்கி ஆயுதங்கள், ...
Read More »தஞ்சம் கோரியவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகியுள்ள முன்னாள் கடற்படை மாலுமி
ஆஸ்திரேலியாவின் கடல் பகுதியில் உயிரிழந்த இந்தோனேசிய மற்றும் சோமாலிய தஞ்சக்கோரிக்கையாளர்களின் உடல்களை மீட்டெடுக்க வேண்டிய பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் மாலுமி ஒருவர், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த மோசமான நினைவுகளால் துன்புறுவதாகத் தெரிவித்திருக்கிறார். அகதிகளின் நிலையையும் துன்பத்தையும் அவர்களை ஆஸ்திரேலிய அரசு நடத்திய விதத்தையும் கண்ட பிறகு, தஞ்சம் கோருபவர்கள் பற்றி தனது மனப்பான்மை முழுமையாக மாறிவிட்டதாக அந்த மாலுமி குறிப்பிட்டிருக்கிறார்.
Read More »பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கும் நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்கும் – சீனா மிரட்டல்
பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டி விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான முடிவை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளன. சீன தலைநகர் பீஜிங்கில் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் திகதி முதல் 20-ம்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபடும் சீனாவிற்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதைக் காரணம் காட்டி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜ்ய ரீதியாக புறக்கணிப்பதாக ...
Read More »ரஜினிகாந்த் திரையுலக பயணத்தில் கடைபிடித்து வந்த கொள்கைகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் குறித்த சிறப்பு கட்டுரை ஒன்று தொகத்து வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் சிவாஜிராவ் கண்டக்டராக இருந்த சமயம். போக்குவரத்து கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நண்பர்களோடு நாடகம் நடத்துகிறார். அந்த நாடகத்தில் துச்சாதணனாக வேடம் போட்டிருந்த சிவாஜிராவின் நடிப்பு அங்கிருதவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிகவும் எளிமையாக நடந்த நாடகத்தை தன் நடிப்பால் பிரமாண்டப்படுத்தினார் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். அவரை அப்படியே அலேக்காக தூக்கி சென்னைக்கு அனுப்பி வைத்தார் ரஜினியின் நண்பரும் பேருந்து ஓட்டுனருமான ராஜ்பகதூர். ...
Read More »பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன!
1983 கலவரத்தின்போது இலங்கை வாழ் தமிழர்கள் நடு வீதிகளில்வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவை தொடர்பான புகைப்படங்கள் இன்றும் காணப்படுகின்றன-பாகிஸ்தானில் இடம்பெற்றதைப் போன்று இலங்கையில் பல சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன-” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 08.12.2021 சீரற்ற உடல்நிலை காரணமாக சில விடயங்களை மேலும் அழுத்தமாக கூற இயலவில்லை. நாடாளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு ...
Read More »தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுப்பினர்களை நியமித்துள்ளார். 2016 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண்.12 இன் விதிகளின்படி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற நீதிபதியான உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜகத் பண்டார லியனாராச்சி, கிஷாலி பின்டோ ஜயவர்தன, ஒய்வு பெற்ற நீதிபதி ரோஹினி வல்கம மற்றும் கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் ஆகியோர் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.
Read More »ஈஸ்டர் சந்தேநபர்கள் மீது கைதிகள் தாக்குதல்
பதுளை சிறைச்சாலையில் விசேட சிறைக்கூடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வர், ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேநகபர்கள் நால்வர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சந்தேநகபர்கள் நால்வர் மீதே, கைதிகள் நால்வரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 10 ஆம் திகதியன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பதுளை காவல் துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அன்றையதினம் இரவு உணவைப் ...
Read More »புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்?
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு – மொழி ஆகிய விடயதானங்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில் முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. கடந்த நல்லாட்சி ...
Read More »ஆஸ்திரேலியா ரசிகைக்கு சர்பிரைஸ் ப்ரோபோசல் கொடுத்த இங்கிலாந்து ரசிகர்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ருசிகர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 3-வது நாளில் ஒரு ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ரசிகரான ராப், பிரிஸ்பேனில் நடந்து வரும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாளில் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த ரசிகர்களின் முன் தனது ஆஸ்திரேலிய காதலியான நாட் இடம் சர்பிரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார். ‘‘நான்கு வருடம் ...
Read More »