புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்துவரும் பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார். அகதிகளுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகளின் கீழ், அகதி ஒருவர் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட வேண்டுமெனில் அவருக்கு அகதி அந்தஸ்து கிடைத்திருக்க வேண்டுமெனவும், பிரியா குடும்பம் அகதிகள் என ஆஸ்திரேலிய அராசால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் Karen Andrews கூறியுள்ளார். முன்னதாக 2GB-க்கு வழங்கிய நேர்காணலில் பிரியா குடும்பம் தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் Marise Payne, குறித்த குடும்பத்தை அமெரிக்காவில் அல்லது ...
Read More »குமரன்
வாழ்வதற்கு உகந்த நகரங்கள்: அடிலெய்ட் முன்னிலை! மெல்பன், சிட்னி பின்னடைவு!!
உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை நியூசிலாந்தின் Auckland நகரமும் இரண்டாம் இடத்தை ஜப்பானின் Osaka நகரமும் மூன்றாமிடத்தை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரமும் பிடித்துள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகள் முன்னிலையில் இருந்த மெல்பன் தற்போது எட்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து 2021ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோவிட் பரவலை ஒவ்வொரு நகரமும் கையாண்ட விதம் புதிய பட்டியலைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்களித்துள்ளது ...
Read More »2021ம் ஆண்டின் முதல் கங்கண சூரிய கிரகணம்
சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்திருந்தது. சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ...
Read More »‘இந்திய தேசியம்தான் எங்கள் முதன்மையான எதிரி!”
”பல்வேறு மாநிலக் கட்சிகள் சந்தர்ப்பவாத நோக்கத்துடன் இந்து தேசியத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன. இது நமது தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதாகும். இந்தநிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்!” என்கிறார் பழ.நெடுமாறன். மொழி உணர்ச்சி உச்சம் தொட்டுவரும் இந்த வேளையில், ”தமிழ் மொழி பேசுகிற மக்கள் வசிக்கிற நிலப்பகுதியைத்தான் ‘தமிழகம்’ என்கிறோம். ஆக, தமிழ் மக்கள் வசிக்கிற நிலப்பகுதியை ‘தமிழ்நாடு’ என்று சொல்வதில் தவறு என்ன? அடுத்து, இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளிலேயே ‘இந்தியா எனும் பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்’ என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ...
Read More »ஜஹ்ரானுடன் தொடர்பு- தபாலதிபர் கைது
ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புவைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பதில் த ஒருவரும் இன்னொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹடகஸ்திகிலியவில் தபால் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். 2018இல் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் வேறு நால்வருக்கும் அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை மட்டக்களப்பு சிறையிலிருந்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த 35 வயது சந்தேகநபர் ஜஹ்ரன் ஹாசிமுடன் நெருஙகிய தொடர்புகளை பேணினார் என காவல் துறை ...
Read More »மட்டக்களப்பில் ஒருவருக்கு யுகே பி.117 அல்பா வைரஸ்
மட்டக்களப்பில் கொரோனா தொற்று பரிசோதிப்பதற்காக நோயாளியில் எடுக்கப்பட்ட மாதிரியை போதனா வைத்தியசாலையில் உள்ள ஆய்வு கூடத்தில் பரிசோதித்தவேளை வீரியம் கூடிய யுகே பி.117 அல்பா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்; பி. தேவகாந்தன் தெரிவித்தார் இந்த புதிய வைரஸ் தொற்று தொடர்பாக நுண்உயிரியல்துறை விசேட வைத்திய நிபுணர்; பி. தேவகாந்தனை இன்று வியாழக்கிழமை (10) தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார் கடந்த மே மாதம் நடுப்பகுதியளவில்தொற்றுக்குள்ளாகிய நோயாளியின் மாதிரியை பரிசோதிக்கும் போதுதான் இந்த ...
Read More »400 ஆதிவாசி குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ராணா
நடிகர் ராணா 400 ஆதிவாசி குடும்பங்களுக்கு தேவையான மளிகை, உணவுப் பொருள், மருத்துவ பொருட்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா. இவர் நடிப்பில் தற்போது விராட பருவம் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் ராணா வனத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. விராட பருவம் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தெலுங்கானா ...
Read More »எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்
கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தில் அது மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கடந்த 40 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு தமிழனாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.எரிக்கப்பட்ட நூலகத்தை தமிழ் மக்கள் எப்படி நினைவுகூர வேண்டும்? முதலாவதாக அதை எரித்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை உலக அளவில் ...
Read More »திருகோணமலையில் உணவின்றி பட்டினியால் சாகக்கூடிய நிலை
திருகோணமலை – வரோதய நகர், புதுக்குடியிருப்பு மக்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் உண்பதற்கு உணவின்றி கஷ்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர். தமது கிராமத்தில் விறகு வெட்டுதல் மற்றும் கூலித்தொழில் செய்தல் போன்றவற்றை பிரதான தொழிலாக மேற்கொண்டு வந்த நிலையில் ,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உண்பதற்கு உணவின்றி தவிர்ப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளியே செல்வதை அடை செய்திருந்த போதிலும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்வதற்கு கூட வீதியால் ...
Read More »வவுணதீவில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவர் கைது
மட்டக்களப்பு – வுவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை இன்று கைது செய்துள்ளதுடன், இரு துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக வவுணதீவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவதினமான இன்றுகாவல் துறையினர் வவுணதீவு காவல் துறை பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை கைது செய்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read More »