சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்திருந்தது.
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க முடியாமல், ஒரு வளையம் போல சூரியனின் வெளி விளிம்பு அதிகபட்ச கிரகணத்தின்போது வெளித்தெரிவதையே கங்கண சூரிய கிரகணம் என்கிறோம். அந்தவகையில் வானியல் அபூர்வ நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் ஏற்பட்டது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 26-ம் தேதி நிகழ்ந்தது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழும் என நாசா அறிவித்தது.
கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா, கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் முழுமையாக தெரிந்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பகுதியளவு தெரிந்தது. கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாக தெரிந்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சிறிது நேரம் மட்டுமே சூரிய கிரகணத்தைக் காண முடிந்தது.
Eelamurasu Australia Online News Portal