ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்புவைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பதில் த ஒருவரும் இன்னொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கஹடகஸ்திகிலியவில் தபால் அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணை பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
2018இல் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் வேறு நால்வருக்கும் அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு சிறையிலிருந்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடியை சேர்ந்த 35 வயது சந்தேகநபர் ஜஹ்ரன் ஹாசிமுடன் நெருஙகிய தொடர்புகளை பேணினார் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் தீவிரவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்தார் ஜஹ்ரானிற்கு அடைக்கலம் வழங்கினார் என காவல் துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal