குமரன்

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் ...

Read More »

தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்

தமிழில் தேசிய கீதம் பாடப்­ப­ட­மாட்­டாது என்ற பொது நிர்­வாக உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்­சரின் அறி­வித்தல் அர­சியல் அரங்கில் பெரும் வாதப் பிர­தி­வா­தங்­க­ளையும் சர்ச்­சை­க­ளையும் விமர்­ச­னங்­க­ளையும் உரு­வாக்கி உள்­ளது.   ஒரு ஜன­நா­யக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடி­மக்­க­ளா­கிய மற்­றுமோர் இனத்­தவர் தமது மொழியில் பாடக்­கூ­டாது. அவ்­வாறு பாடப்­ப­ட­மாட்­டாது. அதற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்று ஓர் அமைச்சர் அறி­வித்­தி­ருப்­பது ஓர் அர­சியல் கேலிக் கூத்­தா­கவே நோக்­கப்­பட வேண்டும். ஏனெனில் தேசிய கீதம் என்­பது பொது­வா­னது. நாட்டின் அனைத்து மக்­க­ளுக்கும் உரி­யது. அனைத்து மக்­களும் சொந்தம் கொண்­டா­டப்­பட ...

Read More »

நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்- நித்யாமேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நித்யாமேனன், நிச்சயம் தேசிய விருது வாங்குவேன் என தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் தேசிய விருது ...

Read More »

அர­சியல் ‘வேட்டை’

ராஜ­கி­ரிய பகு­தியில் 2016ஆம் ஆண்டு நடந்த சர்ச்­சைக்­கு­ரிய விபத்து ஒன்று தொடர்­பாக, முன்னாள் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க கைது செய்­யப்­பட்டு, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு, சில நாட்­களில் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கிறார். இவர் கைது செய்­யப்­பட்ட போது,  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைக் கைது செய்­வ­தற்குத் தேவை­யான நடை­மு­றைகள் பின்­பற்­றப்­ப­ட­வில்லை, நீதி­மன்ற பிடி­யா­ணையும் இருக்­க­வில்லை. கைதுக்­காக முன்­வைக்­கப்­பட்ட கார­ணமும் மிகவும் பல­வீ­ன­மா­னது.   மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர் நடந்த ஒரு விபத்து அது. அந்த விபத்தில் யாரும் உயி­ரி­ழக்­க­வு­மில்லை. சம்­பிக்க ரண­வக்­கவின் வாகனம், நேர­டி­யாக மோதவும் இல்லை. ...

Read More »

இணைப்பாளர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (01.01.2020) முன்னெடுக்கப்பட்டது.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1047 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் மீது கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தே இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read More »

அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்!

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரதான பொறுப்புடைய துறை என்ற ரீதியில்  இராணுவமானது எச் சந்தர்ப்பத்திலும் ஏற்படக் கூடிய அனைத்து சவால்களையும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.   ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: முறையான பயிற்சி மூலமே உள்ளக அல்லது வெளிப்புற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள முடியும். அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேசிய ...

Read More »

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: வனவிலங்குகளைக் காப்பாற்றிய ஊழியர்கள்!

ஆஸ்திரேலியாவில் கடுமையான காட்டுத் தீ நிலவுகிறது. இதற்கிடையில் வனவிலங்கு சரணாலாயம் ஒன்றிலிருந்து 200க்கும் அதிகமான வனவிலங்குகளை ஊழியர்கள் காப்பாற்றினர். ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 700 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 1.2 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தளங்களும், வனவிலங்கு சரணலாயங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின. இந்த ...

Read More »

புத்தாண்டில் சோகம்: இந்தோனேசியா மழை வெள்ளத்துக்கு 9 பேர் பலி!

இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும் நிலையில் இன்று 9 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உலகமெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேசியாவில் மட்டும் சோகமான புத்தாண்டாகத் தொடங்கியுள்ளது. ஜகார்த்தா நீரில் வீடுகளும், கார்களும் மூழ்கின. மக்கள் சிறிய ரப்பர் லைஃப் படகுகள் அல்லது டயரின் உள் குழாய்களில் துடுப்பு செலுத்திச் செல்வதை தொலைக்காட்சிகளில் காண முடிகிறது. வணிக மற்றும் ராணுவ விமானங்களைக் கையாளும் ஹலிம் பெர்தானகுசுமா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கடுமையான வெள்ளம் ...

Read More »

உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்!

நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை இன்று வரவேற்று மகிழ்ந்தனர். * நியூசிலாந்து மக்கள் உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடினர். * அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றனர். * கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கைகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை!

காட்டுத்தீ பரவுவதை தடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெர்ரா மற்றும் சில முக்கிய பிராந்தியங்களில் புத்தாண்டையொட்டி வாணவேடிக்கைகள் மற்றும் பட்டாசுகள் வெடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களான விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தாஸ்மானியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. ஏற்கனவே இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஹெக்டேர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகி விட்டது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 9 பேர் பலியாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் அனைத்து மாகாணங்களிலும் வெயிலின் தாக்கம் ...

Read More »