மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் என்ற இணையதள தொடருக்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய ...
Read More »குமரன்
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கிய பயணிகள் மீட்பு!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத் துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணத்துக்கு புத்தாண் டுக்காக சுற்றுலா சென்றிருந்த நூற்றுக் கணக்கான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களை ஆஸ்திரேலிய கடற் படையினர் நேற்று மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்ற னர். ...
Read More »அலுவலகத்திற்கு வாருங்கள் முத்தமிடலாம் என்றார் டிரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளரும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாh. அடுத்த வாரம் வெளியாகவுள்ள நூலொன்றில் பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளர் கொட்னி பிரைல் இதனை தெரிவித்துள்ளார் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் இது இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என் அலுவலகத்திற்கு வாருங்கள் நாங்கள் முத்தமிடலாம் என டிரம்ப் தெரிவித்தார் என வெளியாகவுள்ள நூலில் பிரைல் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியுசில் பணியாற்றுபவர்களில் கவர்ச்சியானவர் என என்னை கருதுவதாக டிரம்ப் குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டிரம்பின் அமெரிக்க அழகி ...
Read More »அரசமைப்பை திருத்துங்கள்: மல்வத்து பீடம் கோரிக்கை!
நாட்டில் வளர்ச்சிக்காக புதிய அரசமைப்பு திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமென கண்டி மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் தெரிவித்துள்ளார். அரசமைப்பு திருத்த பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் தெளிவுபடுத்தபட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மேற்படி அரசமைப்பு திருத்த பணிகளுக்கு எதிர்கட்சியின் ஒத்துழைப்பு மிக அவசியமானதெனவும் தெரிவித்தார்.
Read More »அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது!
அரசியல் தீர்வு தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தனியார் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் போட்டியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் ...
Read More »பயங்கரவாதத்தின் பிடியில் சோமாலியா!
சோமாலியாவின் தலைநகர் மொகாதிஷுவில் 2019 டிசம்பர் 28 இடம்பெற்ற பெரிய ட்ரக் குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 79 பேர் கொல்லப்பட்டதுடன் 149 பேர் காயமடைந்தனர். இந்த கொடூரச்சம்பவம் அந்த நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் சர்வதேச படைகளினால் மொகாதிஷுவில் இருந்து விரட்டப்பட்ட அல் – ஷாபாப் என்ற அல் – கயெடாவுடன் தொடர்புடைய பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் பல தற்கொலைக்குணடுத் தாக்குதல்களை நடத்திய அந்த இயக்கம் சோமாலியாவின் சில பகுதிகளை ...
Read More »பற்றி எரியும் காட்டுத்தீ – ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய பயணம் ரத்து?
காடுகளில் தொடர்ந்து எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நாடாளுமன்றம் தெரிவித்தது. இதற்கிடையே, நியூசவுத் வேல்ஸ் பகுதியில் ...
Read More »பொன்னியின் செல்வனுக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட அரங்கு!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட் ஒன்று உருவாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது. இதில் பல்வேறு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான நடிகர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ...
Read More »ஈரான் ராணுவ தளபதியை கொன்ற அமெரிக்கா!
ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ராக்கெட் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவ தளபதி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா கூறியதைத் தொடர்ந்து, ...
Read More »ஊடகவியலாளரை கைதுசெய்ய முயற்சி !
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு அவரை கைதுசெய்ய இரவில் சென்ற காவல் துறை அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். நேற்று இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தன் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் காவல் துறை அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்திய தோடு ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 ...
Read More »