முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட எமது மக்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற இக்கட்டான நிலையிலிருந்து நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டி இருக்கிறது என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவரும், தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவருமான, அருட்தந்தை சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முப்பது ஆண்டு காலப் போர் முடிவடைந்து ஒரு தசாப்தம் இரண்டு ஆண்டுகளை, அதாவது பன்னிரண்டு ஆண்டுகளை கடந்து போகிற நிலையிலே, முள்ளிவாய்க்கால் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும், இறுதிப்போர் காலங்களிலே ...
Read More »குமரன்
காசா மீது தாக்குதல்- அமெரிக்கா, இங்கிலாந்தில் கண்டன போராட்டம்
பாஸ்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் உள்ள மைதானத்தில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். காசா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிலடெல்பியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஸ்டனில் இஸ்ரேல் தூதரகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினார்கள். வாஷிங்டனில் உள்ள மைதானத்தில் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். காசாவில் நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக ...
Read More »நினைவு தூபியில் சுடரேற்றினார் சிவாஜிலிங்கம்
முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17), முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில், சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில், நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கும் சுடர் ஏற்றுவதற்கும், பலருக்கு எதிராக தடை உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், இனப்படுகொலை வாரத்தின் ஆறாவது நாளான இன்று (17) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்குச் சென்று, சுடரேற்றி ...
Read More »என்னையும் கைது செய்யுங்கள் – நடிகை ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ...
Read More »பத்து நிமிடம் தாருங்கள் – இஸ்ரேலிடம் மன்றாடிய பத்திகையாளர்கள்
யும்னா அல் செயட் அந்த கட்டிடத்திலிருந்து தப்பி பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலமேயிருந்தது. காஸாநகரில் 60 வீடுகளும் சர்வதேச ஊடகங்களின் பல அலுவலகங்களும் காணப்படும் 11மாடிகளை கொண்ட அல் ஜலாலா டவரில் ஒரு லிப்ட் மாத்திரமே இயங்குகின்ற நிலையில் அல்சையட் மிகவேகமாக மாடிப்படிகளில் இறங்கினார். முதலில் முதியவர்களையும் குழந்தைகளையும் வெளியேற்றுவதற்கு வழிவிட்டோம் என அவர் தெரிவித்தார். நாங்கள் அனைவரும் கீழே ஓடினோம் யாரால் குழந்தைகளை கீழே கொண்டுபோகமுடியுமோ அவர்கள் எல்லாம் குழந்தைகளை கொண்டுசென்றோம் என அவர் தெரிவித்தார். நான் இரண்டு குழந்தைகளை கீழே கொண்டுசென்றேன் ...
Read More »தமிழருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்
தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலைக்கும் இன்று வரை இடம்பெற்று வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கும் நீதியைப் பெற்றுக்கொடுத்து தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை ஈழத்தில் வாழ சர்வதேச தரப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்” என கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது: “இலங்கையின் ஆட்சியானது தொடர்ச்சியாக தமிழ் சமூகத்தை மிலேச்சத்தனமான அடக்குமுறைக்குள் வைத்திருக்கவே முயலுகின்றது. அதன் சாட்சியமே முள்ளிவாய்க்கால் நினைவுக் கல்லை காணாமல் ஆக்கி நினைவு தூபியையும் இடித்து அழித்த ...
Read More »யாழில் 9 பேர் உட்பட வடக்கில் மேலும் 55 பேருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9 பேர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோத னைக்குஉட்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 11 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7 பேரும் என 55 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு ...
Read More »பந்தை சேதப்படுத்தியது அணியின் பவுலர்களுக்கு தெரியும் – ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியது. அந்த அணியின் இளம் பேட்ஸ்மேன் கேமரூன் பான்கிராப்ட் உப்புத்தாளை கொண்டு பந்தை ஒரு பக்கம் தேய்த்து அதன் தன்மையை மாற்ற முயற்சித்தது கேமரா பதிவின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. பந்து ஸ்விங் ...
Read More »அகதிகளை காலவரையின்றி சிறைப்படுத்தும் புதிய சட்டம் !- மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை
ஆஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ்நிலை முழுதும் கூட காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்துடையது என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்த சட்டத்திருத்தம், ஆஸ்திரேலிய அரசு அகதிகளின் விசாக்களை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதே சமயம், சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அகதிகளை நாடுகடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா ரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறைப்படுத்தப்படுவார்கள் எனச் சொல்லப்படுகின்றது. குணநலன் அடிப்படையில், பாதுகாப்புக்கு ...
Read More »சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி கோரப்பட்ட வேண்டும்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கோரிக்கை விடுக, வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்புக்கு பெரும் சவாலாக கொரோனா அலை உருவெடுத்துள்ள நிலையில் இலங்கை அரசினால் ; முடக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு தாயகப் பிரதேசங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆ.ர் பரிசோதனை ...
Read More »