பத்து நிமிடம் தாருங்கள் – இஸ்ரேலிடம் மன்றாடிய பத்திகையாளர்கள்

யும்னா அல் செயட் அந்த கட்டிடத்திலிருந்து தப்பி பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஒரு மணித்தியாலமேயிருந்தது.

காஸாநகரில் 60 வீடுகளும் சர்வதேச ஊடகங்களின் பல அலுவலகங்களும் காணப்படும் 11மாடிகளை கொண்ட அல் ஜலாலா டவரில் ஒரு லிப்ட் மாத்திரமே இயங்குகின்ற நிலையில் அல்சையட் மிகவேகமாக மாடிப்படிகளில் இறங்கினார்.

முதலில் முதியவர்களையும் குழந்தைகளையும் வெளியேற்றுவதற்கு வழிவிட்டோம் என அவர் தெரிவித்தார்.

நாங்கள் அனைவரும் கீழே ஓடினோம் யாரால் குழந்தைகளை கீழே கொண்டுபோகமுடியுமோ அவர்கள் எல்லாம் குழந்தைகளை கொண்டுசென்றோம் என அவர் தெரிவித்தார்.


நான் இரண்டு குழந்தைகளை கீழே கொண்டுசென்றேன் அனைவரும் வேகமாக ஓடினோம் என அவர் குறிப்பிட்டார்
சிலமணிநேரத்திற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவம் அந்த கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் அனைவரையும் வெளியேறுமாறும் உத்தரவிட்டிருந்தது.

தொலைபேசி மூலம் இஸ்ரேலிய இராணுவம் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தது.

அல் ஜசீராவின் சவ்பாட் அல் கஹ்லூட் வேகமாக செயற்படவேண்டிய நிலையிலிருந்தார்,அவரும் அவரது சகாக்களும் தங்களால் முடிந்தளவிற்கு ஆவணங்கள் உட்பட பொருட்களை சேகரித்து கீழே கொண்டு செல்ல முயன்றனர்.


குறிப்பாக கமராக்களை கொண்டு செல்ல முயன்றோம் என அவர் தெரிவித்தார்.ஆனால் அதற்கு நேரம் தேவைப்பட்டது.
15 நிமிடங்கள் தாருங்கள் என ஏபிபத்திரிகையாளர் ஒருவர் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு மன்றாடினார்.

எங்களிடம் நிறைய உபகரணங்கள் உள்ளன கமராக்கள் உள்ளன நீங்கள் அவகாசம் வழங்கினால் அதனை வெளியில் கொண்டுசெல்வோம் என அவர் மன்றாடினார்.

கட்டிடத்தின் உரிமையாளர் ஜவாட் மஹ்டியும் மேலும் காலஅவகாசத்தை பெற முயன்றார்.


நான்கு பேர் உள்ளே சென்று கமராக்களை எடுத்துவர அனுமதியுங்கள் என்பதை மாத்திரம் நான் உங்களிடம் கேட்கின்றேன், என அவர் புலனாய்வு அதிகாரியிடம் மன்றாடினார் நாங்கள் உங்கள் வேண்டுகோளை மதிக்கின்றோம்,நீங்கள் விரும்பாவிட்டால் நாங்கள் அதனை செய்யமாட்டோம்- பத்து நிமிடம் தாருங்கள் என அவர் கேட்டார்.
பத்து நிமிடங்கள் மாத்திரம்கூட தரமுடியாது என அந்த அதிகாரி தெரிவித்தார்,உள்ளே எவரும் செல்ல முடியாது நாங்கள் ஏற்கனவே ஒரு மணித்தியாலம்வழங்கிவிட்டோம் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதும் நீங்கள்எங்கள் பணிகளை,நினைவுகளை வாழ்க்கையை அழித்துவிட்டீர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள் ஆண்டவன்இருக்கின்றான் என மஹ்டி தெரிவித்தார்.

அந்த கட்டிடத்தில் ஹமாஸ் அமைப்பின் புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது,காஸாவில் கட்டிடமொன்றை தரமட்டமாக்குவதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் வழமையான குற்றச்சாட்டு இது.

ஹமாஸ் பத்திரிகையாளர்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றது என குற்றம்சாட்டிய இஸ்ரேல் இராணுவம் ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிட தவறிவிட்டது.
நான் இந்த அலுவலகத்தில் பத்து வருடங்களாக பணியாற்றுகின்றேன் நான்சந்தேகத்திற்கு இடமான எவரையும் பார்க்கவில்லை என அல் கஹ்லூட் தெரிவித்தார்.

நான் எனது சகாக்களிடம் இது குறித்து கேட்டேன்அவர்கள் சந்தேகத்திற்கு இடமான எதனையும் இராணுவத்துடன் தொடர்புடைய எதனையும் காணவில்லை என குறிப்பிட்டனர் என அவர் தெரிவித்தார்.

ஏபியின் தலைவரும் பிரதமநிறைவேற்று அதிகாரியுமான கரி புருட் – நாங்கள் 15வருடங்களாக இந்த கட்டிடத்திலிருந்து பணிபுரிகின்றோம்,ஹமாஸ் அங்கு இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என குறிப்பிட்டார்.


இஸ்ரேலின் விமானக்குண்டுவீச்சுகள் குறித்து அல்ஜசீராவிற்காக செய்தி சேகரிக்கும் ஏபிக்காக பணியாற்றிய அல்சையட் பொதுமக்கள் வாழும் ஊடக அலுவலகங்கள் இயங்கும் அந்த கட்டிடத்தினால் என்ன ஆபத்து என்பது தனக்கு விளங்கவில்லை என குறிப்பிட்டார்.
இந்த கட்டிடத்தில் இருந்திருக்ககூடிய ஹமாஸ் அல்லது வேறு அமைப்பின் உறுப்பினர்கள் எங்கே என காஸாவை சேர்ந்த ஒருவர் கேள்விஎழுப்பினார்.

மக்கள் இதில் வசிப்பவர்களிற்கு ஒருவரை ஒருவர் நன்கு தெரியும்,முதல் ஐந்து மாடிகளிலும் இயங்கிய அலுவலகங்கள் மோதல்கள் காரணமாக ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதால் ஊடக அலுவலகங்களும் மக்களின் வீடுகளும் மாத்திரம் காணப்பட்டன என அவர் தெரிவித்தார்.
பகல் 3.12 அளவில் இஸ்ரேலின் முதலாவது தாக்குதல் இடம்பெற்றது அதன் பின்னர் மூன்று ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதை தொடர்ந்து அல் ஜலாலா கட்டிடம் இடிந்து விழுந்தது.
பலவருட நினைவுகள்,கட்டிடடத்தில் பல வருடங்கள் பணியாற்றியது அனைத்தும் திடீரென இடிபாடுகளாக மாறிவிட்டன என அல் கஹ்லூட் தெரிவித்தார்.

தனது உறவினர் வீட்டின் கதவை தட்டி கட்டிடம் கதவை தட்டி கட்டிடம் தரைமட்டமாகிய தை தெரிவித்தவேளைதான் வீட்டிலிருந்தேன் என தெரிவித்தார் சட்டத்தரணி இஸ்லாம் அல் ஜயீம்.
அவர் அந்த கட்டிடத்திலேயே பணிபுரிந்தவர்


நான் அந்த கட்டிடத்தை நோக்கி ஓடினேன் பொதுமக்களும் அந்த கட்டிடத்தில் பணிபுரிந்தவர்களும் வெளியில் நின்றுகொண்டிருந்தனர்,நான் உள்ளே சென்றே மின்சாரம் இல்லாததால் லிப்ட் இயங்கவில்லை நான் படியில் ஏறிச்சென்றேன் இருளில் தடு;க்கி பல முறை விழுந்தேன் அழுதேன் கதறினேன் எனஅவர் தெரிவித்தார்.
இரவு முழுவதும் கடும் பணிக்கு பின்னர் நான் உறங்கிக்கொண்டிருந்தவேளை வெளியேறுங்கள் வெளியேறுங்கள் என எனது சகாக்கள் அலறினார்கள் என ஏபி பத்திரிகையாளர் பரேஸ் அக்ரம் தெரிவித்தார்
அவர் தனது மேசையிலிருந்த மடிக்கணிணி உட்பட சில பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே ஒடிவந்து காரில் ஏறியதாக எழுதியுள்ளார்.

அவர் தான் அந்த கட்டிடத்திலிருந்து சற்று தூரம் சென்றதும் காரை நிறுத்தி கட்டிடத்தை பார்த்துள்ளார்.

அவ்வேளை டிரோன் தாக்குதல் இடம்பெறுவதையும்அதன் பின்னர் எவ் 16 தாக்குதல் இடம்பெறுவதையும் அவர் பார்த்துள்ளார்.

முதலில் ஏதோ ஒன்றின் அடித்தளம் வீழ்வது போல தோன்றியது ,அடுக்கிவைக்கப்பட்டுள்ள பொட்டட்டோ சிப்ஸ்கள் மீது உங்கள் கையால் குத்தினால் என்ன நிகழும் அது போல தோன்றியது,அதன் பின்னர் புகைமண்டலம் புழுதியும் அனைத்தையும் மூடிமறைத்தன,வானம் நடுங்கியது அதன் பின்னர் பலருக்கு வீடாகவும் சிலருக்கு அலுவலகமாகவும் காணப்பட்ட அந்த கட்டிடம் புழுதிக்குள் மறைந்தது என அவர் குறிப்பிட்டார்.

அல் ஜசீரா