பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஓவியா டுவிட்டரில், என்னையும் கைது செய்யுங்கள் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டெல்லியில், ‘எங்கள் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்?’ என பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பும் வகையில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக டெல்லியில் உள்ள காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து ‘என்னையும் கைது செய்யுங்கள்’ (#ArrestMetoo) என்ற ஹேஷ்டேக்கை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி டுவிட் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகை ஓவியா, டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததைக் கண்டித்து, இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியதோடு, #ArrestMetoo என்ற ஹேஷ்டேக்கையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Eelamurasu Australia Online News Portal