அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த இருமுறை ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற சைக்கிள் பந்தய வீரரான ஜேக் பாப்ரிட்ஜ் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர், ஜேக் பாப்ரிட்ஜ். இவர், கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் அவுஸ்ரேலியாவிற்காக சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளார். அவருக்கு ஏற்பட்ட முடக்குவாத பிரச்சனையால் சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டு விலகினார். இந்நிலையில், அவர் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்திய காவல் துறை , அங்கிருந்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை கண்டுபிடித்துள்ளனர். அதைத்தொடர்ந்து அவரை காவல் துறையினர் ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா வங்காளதேசம்?
வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது. வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திப்பது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். வங்காளதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அவுஸ்ரேலியஅணி நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ...
Read More »விஷால் தங்கை திருமணம்!
தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் ...
Read More »ஜப்பானில் இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட்!
ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில், புத்த மத பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகளை செய்யும் ரோபோட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டோக்கியோ சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் இடுகாடு கண்காட்சி இந்த ஆண்டு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த கண்காட்சி இம்முறை ஜப்பான் நாட்டு தலைநகரான டோக்கியோவில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள், இயந்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் கண்காட்சியில் கலந்து ...
Read More »தலைவர் பிரபாகரன் இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார்!
தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்தெசரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்குவழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என கோத்தா குறிப்பிட்டார். எனினும் பிரபாகன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. ...
Read More »அவுஸ்ரேலியாவில் துடுப்பாட்ட மட்டையால் சக மாணவர்களைத் தாக்கிய மாணவன்!
கான்பராவிலுள்ள உள்ள அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் (Australian National University) வகுப்பறையில் ஒரு துடுப்பாட்ட மட்டை (baseball bat) கொண்டு பல மாணவர்களைத் தாக்கிய மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். வகுப்பறையில் துடுப்பாட்ட மட்டையுடன் இன்று காலை நுழைந்த அந்த மாணவரை மற்றைய மாணவர்கள் தடுத்து நிறுத்துவதற்கு முன்பாக நான்கு மாணவர்களை அவர் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், சிலர் தீவிரமாக காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேவேளை யாருடைய உயிருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லையென கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதல்தாரி 18 வயதான வெள்ளை இனத்தவரென்றும், ...
Read More »சாம்சங் ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனம் ஜூன் மாதம் அறிமுகம் செய்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 2.3 ஜிகாஹெர்ட்ஸ் 64-பிட் எக்சைனோஸ் 8895 ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், எல்கெட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, வைபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், கைரேகை ...
Read More »இன்று `வேலைக்காரன்’ படத்தின் மாதிரி விருந்து
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `வேலைக்காரன்’ படத்தில் இருந்து இன்று மாதிரி விருந்து ஒன்று வழங்கப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ...
Read More »வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: அவுஸ்ரேலிய லெவன் அணி அறிவிப்பு
வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடங்கும் நிலையில், ஆடும் லெவன் அணியை அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. வங்காள தேசம் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. பெரும்பாலும் போட்டி நடைபெறுவதற்கு சற்று முன்புதான் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பெயரை அணி வெளியிடும். ஆனால் நாளை டாக்காவில் தொடங்கும் முதல் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அந்த அணி இன்றே வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ...
Read More »சம்பந்தன் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதே ...
Read More »