யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர். “மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் – மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார். “அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டியோ”? மற்றவரின் பதில், குண்டு வெடித்தது போல ...
Read More »குமரன்
சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை!
சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரோம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இத்தாலி தலைநகரான ரோமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு நகர சபையானது சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பொது இடங்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் உலாவுவது மற்றும் அன்பின் பாலத்தில் காதல் சின்னத்தை (பூட்டு) பதிவிடுவதற்கு அபராதம் விதித்துள்ளது. ‘ட்ரெவி நீருற்று’ போன்ற முக்கியமான சுற்றுலா தளங்களில் நொறுக்கு தீனிகள் தின்பது மற்றும் பொது நீர்க்குழாய்களில் வாய் வைத்து நீர் அருந்துவது போன்றவற்றிற்கும் தடை விதித்துள்ளது. ‘ஸ்கிப் தி லைன்’ ...
Read More »முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் !
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் ...
Read More »ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும்!
மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றிப் பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே மக்களின் கருத்திற்கு மதிப்பளிக்கப்படும் ...
Read More »உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள்!
தேர்தல் என்று வந்தால் உங்கள் உரிமைகளுக்காகப் போராட முன்னிற்பவர்களுக்கே வாக்கு அளியுங்கள் என்று. அப்போது அவர்கள் எங்கள் வாக்கைப் பண்டமாற்றாகக் கோரியே கொடைகள் தரப்பட்டன என விக்கேனஸ்வரன் தெரிவித்தார். கேள்வி: 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப் போதும் என்று எமது நாட்டின் ஜனாதிபதி இந்திய ஊடகவியலாளர்களிடம் அண்மையில் கூறியுள்ளார். அது பற்றி உங்கள் கருத்து என்ன? பதில்: அதைத் தீர்மானிப்பது அவர் அல்ல. எமது மக்களே! அவரைப் பதவிக்குக் கொண்டுவர நாங்கள் 2014இல், 2015இல் பாடுபட்டது அவர் எங்களுடன் சேர்ந்து பேசி எமது ...
Read More »அவுஸ்திரேலிய முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை வெளியானது!
அவுஸ்திரேலியாவின் அகதிகள் பிராந்திய தடுப்பு முகாம்களில் 58 இலங்கையர்கள் மாத்திரமே தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் உள்துறை திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அவர்களில் 43 பேர் நவுறு தீவிலும், 15 பேர் பப்புவா நியுகினியிலும் உள்ளனர். அதேநேரம் ஆட்கடத்தல் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பிரவேசிக்கின்ற எந்த நபரும், அங்கு குடியேற்றப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய உள்துறை திணைக்களத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு படகு மூலம் பிரவேசிக்கின்ற இலங்கையர்கள், ...
Read More »தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா !
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக தமிழ் இயக்குனர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. விக்ரமன் தலைவராகவும், ஆர்கே.செல்வமணி பொதுசெயலாளராகவும் பேரரசு பொருளாளராகவும் இருந்து வருகின்றனர். இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இதில் தலைவர் விக்ரமனும் பொதுசெயலாளர் ஆர்கே.செல்வமணியும் ஆண்டறிக்கையை வாசித்து சங்கத்தின் நிர்வாகம் செய்த பணிகளை பட்டியலிட்டனர். பின்னர் பொருளாளர் பேரரசு ஆண்டு கணக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகத்தின் ...
Read More »குண்டுத் தாக்குதல் -அமெரிக்காவில் வழக்குகள் தொடுக்கக்கூடிய சாத்தியம்!
இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தியானதும் தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிராக அமெரிக்கா சட்டநடவடிக்கை எடுக்க கூடிய சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்த தாக்குதல்களில் அமெரிக்க பிரஜைகளும் கொல்லப்பட்டதினால் அமெரிக்கா அதன் நீதிமன்றமொன்றில் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடுக்க கூடும் என்று அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று தங்களது பிரஜைகளை பலிக்கொடுத்த மற்றைய நாடுகளும் குறிப்பாக ஐக்கிய இராச்சியம், அவுஸ்ரேலியா, இந்தியா போன்றவை வழக்குகளை தொடுக்க கூடிய வாய்ப்புகள் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் ...
Read More »வில்பத்துவில் கடற்படை முகாம் நீக்கப்படவில்லை!
வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும், நாட்டுக்குள் அசாதாரண நிலைமைகள் தோன்றக் கூடியதான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார். பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையின் முகாம் ஒன்று வில்பத்து பகுதியில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் தகவல் தவறானது. இப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் முகாம் அல்ல. இது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும். இந்த நிலத்தில் தேசிய உணவு ...
Read More »பெனாசிர் புட்டோவின் கணவர் கைது!
போலி வங்கி கணக்குகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய முறைகேடு தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியதற்கு இடையே ஜாமீன் கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் சர்தாரி. ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது ...
Read More »