சிறுபாண்மையினரின் குறிப்பாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்தளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விக்கிணேஷ்வரன் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
Read More »குமரன்
நீருக்கடியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து யாழ்ப்பாணம், அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள நீர்முழ்கி நடவடிக்கையின் போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பொதியில் 15 கிலோ கிராம் வெடிபொருட்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. பின்னர் குறித்த பொதி மேலதிக விசாரணைக்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
Read More »விஷால் – அனிஷா திருமணம் நிறுத்தமா?
விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக கூறினார்கள். இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் ...
Read More »‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வரும் ஆஸ்திரேலிய மாணவர்கள்
கார்பன் மாசுவை குறைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர்கள் ‘சோலார்’ ஆட்டோவில் உலகை வலம் வருகின்றனர். கார்பன் மாசுவை குறைக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டின் ராயல் மெல்போர்ன் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் சூரிய மின்சக்தி(சோலார்) மூலம் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோவை வடிவமைத்து இருக்கின்றனர். இந்த ஆட்டோவில் டிரைவர் மற்றும் 4 பயணிகள் அமரலாம். மணிக்கு 50 கி.மீ வேகத்தில் செல்லும், இந்த எலெக்ட்ரிக், ஆட்டோவை ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால், 300 கி.மீ வரை பயணிக்கும். ஆஸ்திரேலியாவில் 3 ஆயிரம் கி.மீ இந்த ...
Read More »ஷரியா பல்கலைக்கழகத்தை பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும்!
மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் தொடர்ந்தும் அதேபோன்று இயங்குவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, அதனை கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என தெரிவித்தார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்காக பெருமளவான நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக அது தொடர்ந்தும் இவ்வாறு இயங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் அப்பல்கலைக்கழகம் கிழக்குப் பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட வேண்டும். அங்கு ...
Read More »ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் விவகாரம்!-இராணுவ புலனாய்வு உறுப்பினர் கைது
ஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரம் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவரையே வியாழக்கிழமை கைது செய்ததாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். குறித்த புலனாய்வு உறுப்பினர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 2008 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 3 ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் ஊடகவியலாளர் நாமல் பெரேரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் குறித்த இராணுவ புலனாய்வு ...
Read More »ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆர்சரின் அசுர பந்து வீச்சில் 179 ரன்னில் சுருண்டது ஆஸ்திரேலியா
ஹெட்டிங்லேயில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 179 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து -ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் ஹெட்லிங்லேயில் தொடங்கியது. மழைக் காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக தொடங்கப்பட்டது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஹாரிஸ், அடுத்து வந்த கவாஜா ஆகியோர் தலா 8 ரன்னில் அவுட் ஆனார்கள். அதன்பின் டேவிட் ...
Read More »டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டம்!
டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தனை கண்டு கொள்ளவே இல்லை. எனவே, இந்தியாவில் பெரிய அளவில் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதல் நடத்தி உலகத்தின் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. ஏராளமான பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஸ்-இ- ...
Read More »கதை திருட்டு வருத்தமளிக்கிறது!- பாக்யராஜ்
சினிமாவில் கதை திருட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவது வருத்தமளிப்பதாக இயக்குனர் பாக்யராஜ் கூறியுள்ளார். ஆரி-ஷாஷ்வி பாலா ஜோடியாக நடித்துள்ள படம் ‘எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான்’ முகமது அபுபக்கர், பகவதி பெருமாள், ஷரத்ராஜ், பழனி, பிஜேஜ் நம்பியார், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கவிராஜ் இயக்கி உள்ளார். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாக்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:- “ஏலியனை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர் என்று ...
Read More »நிச்சயம் அரசியலுக்கு வருவேன் – யாஷிகா ஆனந்த்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான யாஷிகா ஆனந்த், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார். புவன் நல்லான் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிகா ஆனந்த் பேசியதாவது:- ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளேன். இதுவரை நான் ஏற்காத கதாபாத்திரம். மருத்துவ மாணவியாக வருகிறேன். யோகி பாபு, கோபி, சுதாகர் என காமெடிக்கு பஞ்சமே ...
Read More »