தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான யாஷிகா ஆனந்த், நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.
புவன் நல்லான் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், யோகி பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’ஜாம்பி’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் யாஷிகா ஆனந்த் பேசியதாவது:- ஜாம்பி படம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நான் மிகவும் எதிர்பார்க்கும் படம். 4 மாதங்கள் கடின உழைப்பை கொடுத்துள்ளேன்.
இதுவரை நான் ஏற்காத கதாபாத்திரம். மருத்துவ மாணவியாக வருகிறேன். யோகி பாபு, கோபி, சுதாகர் என காமெடிக்கு பஞ்சமே இருக்காது. படத்தில் சில சண்டைக்காட்சிகளில் நானே ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் செய்து இருக்கிறேன்.
பிக் பாசுக்கு பிறகு எனக்கு குடும்ப ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள். என் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த செய்தி அறிந்ததும் நான் எமோஷனல் ஆகிவிட்டேன். கோவை சென்றபோது ரசிகர்களுடன் சேர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்தேன்.
அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த யாஷிகா. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். அதன்மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Eelamurasu Australia Online News Portal