குமரன்

இம்ரான்கான் அடுத்த மாதம் சீனா செல்கிறார்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு அடுத்த மாதம் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் கடந்த ஆகஸ்டு மாதம் பதவியேற்றுக்கொண்டார். பிரதமராக அவர், அடுத்த மாதம் (நவம்பர்) முதல் முறையாக சீனாவுக்கு செல்வதாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா முகமது குரேஷி கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் ஒரு சிறந்த திட்டமாகும். இந்த திட்டத்தை விரைவில் முடிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. இதில் எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் ...

Read More »

தமிழினத்தின் தலைவிதியை தமிழ் மக்கள் பேரவை மாற்றுமா?

தலைவனை வரலாறு உருவாக்குகிறது. வரலாற்றை தலைவன் முன்னெடுக்கின்றான். காலத்தை முன்னெடுப்பவனை வரலாறு முன்னுயர்த்தி அவனை அம்மக்களின் குறியீடாக்குகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தைவிடவும் மிகப் பெரிய அரசியல் பேரவலத்திற்கு தமிழ் மக்கள் ஆளாகியுள்ள காலமிது. தோலிருக்க சுளை பிடுங்கும் நுட்பமான அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்படும் காலமிது. கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் இப்படியொரு பாரிய அரசியல் அவலத்திற்கு தமிழ் மக்கள் உள்ளாகியதில்லை. இது ஒரு நூற்றாண்டு காலம் கண்டிராத மொத்த அவலம். முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலந்தான். அது ஓர் இனப்படுகொலை வாயிலாக இராணுவம் தமிழரை நசுக்கிய ...

Read More »

ஐந்து கமரா கொண்ட எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன்!

எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. ஐந்து கமராவை வழங்கியுள்ளது. எல்.ஜி. நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே, முந்தைய ஸ்மார்ட்போனை விட மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஐந்து கேமரா செட்டப் இருக்கிறது. எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கமராக்கள்: 16 எம்.பி. 107-டிகிரி சூப்பர் வைடு ஆங்கிள், ...

Read More »

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். பண்டத்தரிப்பு மகளிர் உயர்தர பாடசாலைக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் 8 பேர், குறுகியகால புனர்வாழ்வளித்தாவது தம்மை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கண்டி ...

Read More »

ரோஹிங்கியா விவகாரம் – ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமை ரத்து !-கனடா

மியான்மர் நாட்டின் அரசு ஆலோசகரான ஆங் சான் சூ கீ யின் கௌரவ குடியுரிமையை கனடா நாடாளுமன்றம் நேற்று ரத்து செய்தது. மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ராணுவத்தினர் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா ...

Read More »

உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் கர்ப்பபை புற்றுநோய் ஒழிப்பு!

ஆஸ்திரேலியாவில் வருகிற 2022-ம் ஆண்டுக்குள் கர்ப்பபை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பபை புற்றுநோய் பெண்களை பெருமளவில் பாதித்து உயிரை பறிக்கிறது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் இந்த நோய் பாதித்தவர்களில் 10 பெண்களில் 9 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த நோய் ‘எச்.பி.வி.’ (கியூமன்) என்ற வைரஸ்களால் ஏற்படுகிறது. இத்தகைய வைரஸ் 100 விதமாக உள்ளன. அந்த வைரஸ் தாக்கிய பெண்களுக்கு தொடக்கத்தில் நோயின் பாதிப்பு தெரியாது. அதற்கான அறிகுறிகள் தென் படாது. பின்னர் ...

Read More »

நியூயோர்க் டைம்ஸ் செய்திதொடர்பில் விசாரணை!

சைனா ஹாபர் நிறுவனத்தினால் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிரசுரமாகி இருந்த செய்தி தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு அமைவாக இணையத்தள ஊடகவியலார்களின் தேசிய அமைப்பின் தலைவரிடம் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு சைனா ஹாபர் நிறுவனத்தால் 7.6 டொலர் மில்லியன் செலவழித்தமை தொடர்பாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஊடகவியலாளர் மரியா அபி ஹபியினால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் ...

Read More »

குருந்தூர், வெடுக்குநாறி மலைகளுக்குச் சென்ற விமலின் கட்சி!

குமுளமுனை குருந்தூர் மலைக்கும் ,நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடன் இன்று விஜயம் ஒன்றினை மேற்கொன்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்ம உதயசாந்த, மற்றும் ஜயந்த சமரவீர, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளருமான மொஹம்மத் முஸம்மில் ஆகியோர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து குருந்தூர் மலைக்கும் வெடுக்குநாறி மலைக்கும் சென்றனர். இவர்களின் திடீர் விஜயத்தால் குறித்த பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் குழப்பமடைந்து இவர்களின் நோக்கத்தை ...

Read More »

2018ம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

018-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்ட் உட்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. வேதியியல் துறை வல்லுநர்களான அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகிய மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதகுலத்துக்கு உதவும் வகையில் ...

Read More »

மனித புதைகுழியில் ஆடைகளுடன் தொடர்புடைய எந்தவொரு தடயப்பொருளும் கிடைக்கவில்லை!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை 79 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவண ராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடல் ஒன்றை மேற்கொண்டார் குறித்த உரையாடலின் போது, இதுவரை ...

Read More »