குமுளமுனை குருந்தூர் மலைக்கும் ,நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கும் விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தொல்லியல் திணைக்கள உத்தியோகஸ்தர்களுடன் இன்று விஜயம் ஒன்றினை மேற்கொன்டுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்ம உதயசாந்த, மற்றும் ஜயந்த சமரவீர, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளருமான மொஹம்மத் முஸம்மில் ஆகியோர் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த அதிகாரிகளுடன் இணைந்து குருந்தூர் மலைக்கும் வெடுக்குநாறி மலைக்கும் சென்றனர்.
இவர்களின் திடீர் விஜயத்தால் குறித்த பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் குழப்பமடைந்து இவர்களின் நோக்கத்தை அறியும் நோக்குடன் குறித்த மலைகளுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal