குமரன்

கட்சி தாவுவதற்கு எவ்வளவு தொகை தெரியுமா ?

கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தன்னிடம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார. கட்சி தாவுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்  அதாவது இலங்கை ரூபாவின் மதிப்பில் 48 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுபப்பினர் ரங்கே பண்டார சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ...

Read More »

13 வரு­டங்­களின் பின் விடுதலையான அரசியல் கைதி!

லக்ஷ்மன் கதிர்­காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதி­ரி­யான இசிதோர் ஆரோக்­கி­ய­நாதன் கொழும்பு  மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ரச்­சி­யினால்  நேற்­றைய தினம்  விடு­தலை செய்­யப்­பட்டார். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி  விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை சோ்ந்த தற்­பொ­ழுது மர­ண­ம­டைந்­துள்­ள­வர்­க­ளான வேலுப்­பிள்ளை பிர­பா­கரன், பொட்­டு­அம்மான் அல்­லது சிவ­சங்கர் வினோதன் அல்­லது சாள்ஸ் மாஸ்டர், கோமதி மதி­மே­க­லா­ஆ­கி­யோ­ருடன்  இணைந்து சதி செய்து  முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சா லக்ஸ்மன் கதிர்­கா­மரை கொலை செய்­த­மைக்கு உடந்­தை­யாக செய்ற்­பட்­ட­தாக பயங்­க­ர­வாதச் தடைச்­சட்­டதின் கீழ் சகா­தேவன், இசிதோர் ...

Read More »

சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு ...

Read More »

தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்!

கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் ...

Read More »

துமிந்த – பசில் சந்­தித்து பேசியது என்ன?

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் துமிந்த திஸா­நா­யக்­க­வுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் நேற்று முற்­பகல் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது. கொழும்பில் உள்ள துமிந்த திஸா­நாயக்­கவின் இல்­லத்தில் இச் சந்­திப்பு இடம்­பெற்­ற­தா­கவும் இரு மணி நேரம் நீடித்த இச் சந்­திப்பில்  எந்த இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை என்றும் அர­சியல் தக­வல்கள் தெரி­வித்­தன. இச் சந்­திப்பின்போது,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன ஆகிய­வற்­றுக்கிடையே உரு­வா­கி­யுள்ள சிக்­கல்கள் மற்றும் அதனைத் தீர்த்­துக்­கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விசேட­மாக ...

Read More »

பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது நாடாளுமன்றமே!-

சிறிலங்கா தனது  தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் பலடினோ இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அவசியமான அரசமைப்பு நடைமுறைகள் குறித்தே அமெரிக்கா தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என ரொபேர்ட் பலடினோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் நாங்கள் ஜனாதிபதியை சபாநாயகருடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்பதை ...

Read More »

நாடாளுமன்றம் நவம்பர் 5 ஆம் திகதி கூட்டப்படும்!- மஹிந்த

நாடாளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மீண்டும் 5 ஆம் திகதியே நாடாளுமன்றத்தை கூட்டுவதற்காக ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

Read More »

மனம்விட்டுப் பேசுங்க! – 02 நடிகை ரேவதி!

‘புதுமைப் பெண்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘மெளன ராகம்’, ‘கிழக்கு வாசல்’ எனக் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் பெரும்பாலும் நடித்தீர்கள். அதனால், ‘ரேவதி நடித்த கேரக்டர்ஸ் எனக்குக் கிடைத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ எனப் பல முன்னணி நடிகைகளே சொல்லியதுண்டு. இதுகுறித்து..? எளிமையான கேள்விதான். ஆனால், என் மனசுக்குள் நிறைய உணர்வுபூர்வமான எண்ண ஓட்டங்கள் உண்டாகுது. என் சினிமா பயணத்தில், வாய்ப்புக்காக யாரையும் எப்போதும் அணுகினதில்லை; எதிர்பார்த்ததுமில்லை. ‘அப்படி நடிக்கணும்’, ‘இப்படிப் பெயர் வாங்கணும்’னு எந்த இலக்கையும் வெச்சுக்கிட்டதில்லை. முதல் படத்துக்குப் பிறகு கதையின் நாயகிக்கு ...

Read More »

`புலியின் எலும்புகளையும் காண்டாமிருகத்தின் கொம்புகளையும் விற்கலாம்’ – சீனா புதிய கொள்கை!

உலகம் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் வேளையிலே, அதிகம் வீழ்ச்சி காணுவது இயற்கைதான். அவ்வகையில் மிக அதிகமாகப் பாதிப்படைந்து வருவது விலங்குகள். அழிக்கப்படும் காடுகள் ஒருபக்கம் என்றால், நேரடியாகக் கொல்லப்படுவதும் வன விலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது. வனவிலங்குகள் அழிவது என்பது அந்த இனத்திற்கான அழிவு மட்டுமல்ல, உயிரினங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று இணைந்து கலந்து வாழும் இந்தப் பூமியில், ஒரு இனத்தின் அழிவு என்பது, நீண்டபெரும் உணவு சங்கிலியின், ஒரு இணைப்பு துண்டிக்கப்படுவது ஆகும். இது இயற்கை, உருவாக்கிய உலகம், அதைச் சார்ந்த மனிதன் ...

Read More »

மனம்விட்டுப் பேசுங்க! – 01 – நடிகை ரேவதி

திருமண வாழ்க்கை குறித்து உங்கள் கருத்து என்ன? அதில் நீங்கள் உணர்ந்தவை? மிக அழகான பந்தம். அதனால் கிடைக்கும் ஓர் அங்கீகாரம், மகிழ்ச்சி, சிநேகம் ரொம்பவே சிறப்பானது. அதை நானும் உணர்ந்திருக்கேன். நானும் சுரேஷ் மேனனும் காதலிச்சுக் கல்யாணம் செய்துகிட்டோம். ரொம்ப அன்பா, இருவருமே விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம். சினிமாவிலும் சேர்ந்து வொர்க் பண்ணினோம். என் நடிப்புக்கு ஊக்கம் கொடுத்தார். இப்படி அழகா நகர்ந்து சென்ற எங்க திருமண பந்தத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தன. இருவரும் விட்டுக்கொடுத்துப் போவோம்; ஈகோ பார்க்காம சமாதானமும் செய்துக்குவோம். ஆனா, ...

Read More »