குமரன்

விஜயகலாவின் உரை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை!

சிறுவர் அலுவல்கள் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். உத்தியோகபூர்வப் பணி ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின், யாழ். மாவட்டத்துக்கான 8ஆவது வேலைத்திட்டம், யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ஜூலை 02 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அவ்விழாவில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாகவேண்டும்” எனக் கூறியிருந்தார். அந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டு இருந்ததுடன், ...

Read More »

குழந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட தீலிபன்!

இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளரை அவரது பத்துமாத மகள் மற்றும் மனைவியிடமிருந்து பிரித்து அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு 2012 ம் ஆண்டு படகுமூலம் சென்ற தீலிபன் என்ற இலங்கை தமிழரை திங்கட்கிழமை நள்ளிரவில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். இவ்வருட ஆரம்பத்தில் குடியேற்றவாசிகளிற்கான தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட இவரை நாடு கடத்துவதற்கான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருந்த நிலையில் அவர் தற்போது நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை தீலிபனின் மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பான புகலிட தொழில் விசாவை வழங்கிய அதிகாரிகள் பின்னர் தந்தையை ...

Read More »

இன்று 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியது!

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற 18 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்ற 18 பேர் தனி விமானம் மூலம் இன்று (17) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களுடன் அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். A-319 எயார் பஸ் மூலம் 160 பேர் பயணிக்க கூடிய விமானம் ஒன்றிலேயே குறித்த இலங்கையர்களை அவுஸ்திரேலிய ...

Read More »

குறைந்த நீர்.. நிலம் தேவையில்லை.. தருமபுரியை அசத்தும் ஆஸ்திரேலிய விவசாயம்

தருமபுரி அருகே ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தை கொண்டு தேங்காய் நாரில் தக்காளி செடிவைத்து அதிக மகசூல் எடுத்து வரும் பட்டதாரி இளைஞர்கள். தருமபுரி மாவட்டம் பாலக்கொடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி ராஜதுரை. இவர் ஆஸ்திரேலியாவில் பண்ணை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது கிராமத்தில் விவசாயத்தை தொடங்கலாம் என நினைத்து தனது தம்பிகளான சோலைராஜன், புவனேஸ்வரன், சூர்யாபிரகாஷ் ஆகிய இளைஞர்கள ஒருங்கிணைத்து நச்சுத்தன்மை இல்லாமால், இயற்கை முறையிலும், அதிக மகசூல் பெறும் வழியினை மேற்கொள்ள ...

Read More »

நடிகராக அறிமுகமாகும் இசையமைப்பாளர்!

மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் கோபி சுந்தர், நடிகராக அறிமுகமாகிறார். ‘உஸ்தாத் ஹோட்டல்’,‘5 சுந்தரிகள்’, ‘ரிங் மாஸ்டர்’, ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’,‘பெங்களூரு டேஸ்’,‘சார்லி’,‘புலிமுருகன்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். இசையமைப்பாளர்கள் நாயகனாக அறிமுகமாகும் காலமிது. அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கோபி சுந்தர். ஹரி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘டோல் கேட்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இதில் இவரோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு ...

Read More »

கூட்டமைப்பின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?

வடக்கு மாகாண சபை கலைக்கப்படுவதற்கு முன்பதாகவே அடுத்த முதலமைச்சர் யார் என்னும் கேள்வி எழுந்துவிட்டது. கேள்வி எழுந்தது மட்டுமல்ல, அது வடக்கில் தேனீர் கடையிலிருந்து வெற்றிலைக் கடைவரையில் பேசு பொருளாகவும் இருக்கிறது. தமிழரசு கட்சியின் தலைவராக கருதப்படும் மாவை சேனாதிராஜா தொடக்கம் பாதர் இம்மானுவல்வரையில், பலரது பெயர்கள் அடிபடுகின்றன. ஆனால் கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் – அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் அல்லது எந்தவொரு கட்சிiயும் சாராதவரா? தமிழ் அரசியல் அரங்கில் மன்னிக்க வேண்டும் தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் ...

Read More »

காதலன் இறந்த பின்பும் தொடரும் காதல்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த காதலி ஒருவர் புற்றுநோயால் இறந்துபோன தனது காதலனின் விந்தணுவை நீதிமன்றத்தின் உதவியுடன் போராடி வாங்கியுள்ளார். Ayla Creswell மற்றும் Joshua Davies ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது விதி இவர்களது வாழ்க்கையில் விளையாடியது. துரதிஷ்டவசமாக Joshua Davies க்கு புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து அவர் இறந்துபோனார். ஆனால் இவர் இறந்துபோவதற்கு முன்னர் இவரது விந்தணுக்கள் பர்க்கிம்ஹாமில் உள்ள Human Fertilisation and Embryology Authority (HFEA) ...

Read More »

விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!

விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் ...

Read More »

பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள்!

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் திகதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் சிறப்பு வசதிகளை கோரி நவாஸ் ஷெரீப் ...

Read More »

டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராயும் விசேட அமர்வில் முதலமைச்சர் கொள்ளவில்லை!

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வட மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று யாழ். கைதடியில் உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. கடந்த யூலை 10ம் திகதி வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் ...

Read More »