நடிகராக அறிமுகமாகும் இசையமைப்பாளர்!

மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் கோபி சுந்தர், நடிகராக அறிமுகமாகிறார்.

‘உஸ்தாத் ஹோட்டல்’,‘5 சுந்தரிகள்’, ‘ரிங் மாஸ்டர்’, ‘ஹெவ் ஓல்டு ஆர் யூ’,‘பெங்களூரு டேஸ்’,‘சார்லி’,‘புலிமுருகன்’ உள்ளிட்ட பல மலையாளப் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் கோபி சுந்தர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் நாயகனாக அறிமுகமாகும் காலமிது. அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் கோபி சுந்தர். ஹரி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘டோல் கேட்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். இதில் இவரோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

’டோல் கேட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது மலையாளத் திரையுலக பிரபலங்கள் பலரும் கோபி சுந்தருக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள்.