தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை பெற்றிருக்கும் சத்யராஜ், தற்போது நடித்து வரும் படக்குழுவினரை டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சத்யராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டப்பிங் பணிகளும் தற்போது முடிந்துள்ளது. இதில் சத்யராஜ் 12 மணி நேரம் டப்பிங் பேசி பணிகளை முடித்திருக்கிறார். சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது குறித்து இயக்குநர் தீரன் கூறும்போது, ‘சத்யராஜுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின ...
Read More »குமரன்
கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சி! இளைஞர்கள் கைது!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க காவல் ...
Read More »அவுஸ்திரேலிய பேராசிரியர் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா!
உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும் SLIIT தனது 21ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் மாலபேயில் அமைந்துள்ள SLIIT கம்பஸில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த 370 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் கலந்து கொண்டார், சிறப்பு அதிதியாக அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் பயிலல் பிரிவின் பீடாதிபதி இணை பேராசிரியர் கிறிஸ் ரோசன் கலந்து கொண்டார். டேவிட் மெக்கினன் தமது உரையில், ...
Read More »மிதாலி ராஜ் பயோபிக்கில் டாப்சி!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார். மறைந்த அல்லது வாழும் பிரபலங்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்று சினிமா படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன. அது மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் ...
Read More »மலையக அரசியலில் தொடரும் பழிவாங்கும் படலம்!
ஜனாதிபதித் தேர்தல்களுக்குப்பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு பாராளுமன்றத் தேர்தல் காலம் வரை , மலையக சமூகத்துக்குக் கிடைத்துள்ள அமைச்சுப் பதவியைக் கொண்டு இம்மக்களுக்கு ஏதாவது நல்ல விடயங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இங்கு நடப்பதோ வேறு. தனி வீடமைப்புத்திட்டத்தில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அது குறித்த விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஆறுமுகன் கூறுகிறார். அது மட்டுமன்றி, அது தொடர்பான கணக்காய்வு விபரங்களையும் கேட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இ.தொ.கா இப்படி நடந்து கொள்வது இது முதல் தடவையல்ல. ...
Read More »ரொகிங்யா அகதி சிறுவர்களின் கல்விக்கான உரிமையை மறுக்கின்றது பங்களாதேஸ்!
பங்களாதேசின் அகதிமுகாம்களில் உள்ள மியன்மாரின் ரொகிங்யா இன சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கான உரிமை மறுக்கப்படுவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அகதி சிறுவர்களிற்கு கல்வி கற்பதற்கு உள்ள உரிமையை பங்களாதேஸ் அதிகாரிகள் வேண்டுமென்றே மறுக்கின்றனர் என சர்வதேச மனிதஉரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நாங்கள் மனிதர்கள் இல்லையா?என்ற கேள்வியுடன் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்விகற்கும் வயதிலுள்ள சுமார் 40,000 சிறுவர்களிற்கான உரிமை மறுக்கப்படுவது குறித்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன. உரிய கல்வியில்லாத நிலையில் இந்த சிறுவர்கள் இளைஞர் யுவதிகள் துஸ்பிரயோகங்கள் குற்றங்கள் வறுமை ...
Read More »கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்!
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணி என்றால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான் நேற்றுவரை கொள்கை ரீதியாக எத்தகைய கருத்துக்களையும் கூறாதவர்கள் இன்று அவ்வாறு கூறுவதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுவரை இருந்துவிட்டு இன்று மாற்று அணியைத் தேடுகின்றவர்கள் ஒன்று சேரும் இடம் இன்னும் ஒரு அணியாகத்தான் இருக்குமே ...
Read More »விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல!-சுவிட்சர்லாந்து நீதிமன்றம்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது. 1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது. ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே ...
Read More »சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் – நித்யாமேனன்
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் நித்யா மேனன், சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிக்க வந்தேன் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் சித்தார்த்துடன் இணைந்து 180 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை நித்யாமேனன். மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஓகே கண்மணி என்ற படத்தின் மூலம் பெரும் அளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு மனைவியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு தற்போது எடையை குறைத்துள்ளார். நித்யாமேனன் ...
Read More »மீண்டும் கைக்கு வருமா அம்பாந்தோட்டை?
கடந்த வியாழக்கிழமை, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை புதுடெல்லிக்கு மேற்கொள்வதற்கு முன்னர், தனது முதலாவது வெளிநாட்டு ஊடகச் செவ்வியையும், இந்திய ஊடகவியலாளர் ஒருவருக்கே கொடுத்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ. இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆய்வாளர் மற்றும் ஊடகவியலாளரான நிதின் ஏ கோகலே, Bharat Shakti.in மற்றும் SNI ஆகியவற்றின் தலைமை ஆசிரியராகவும் இருக்கிறார். அவருக்கே கோத்தாபய ராஜ பக் ஷ தனது முதலாவது தனிப்பட்ட செவ்வியை வழங்கியிருந்தார். இந்தச் செவ்வி வெளியாகிய பின்னர் தான், அவரது புதுடெல்லி பயணம் இடம்பெற்றது. எனவே, புதுடெல்லியை சங்கடப்படுத்தக் கூடிய, ...
Read More »