உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கும் SLIIT தனது 21ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழாவை அண்மையில் மாலபேயில் அமைந்துள்ள SLIIT கம்பஸில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது தமது உயர் கல்வியை பூர்த்தி செய்த 370 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் கலந்து கொண்டார், சிறப்பு அதிதியாக அவுஸ்திரேலியாவின் கேர்டின் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் பயிலல் பிரிவின் பீடாதிபதி இணை பேராசிரியர் கிறிஸ் ரோசன் கலந்து கொண்டார்.
டேவிட் மெக்கினன் தமது உரையில், ´இங்கு வௌ;வேறு பிரிவைச் சேர்ந்தவர்களைக் காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். உயர் கல்வியை தொடர்ந்து, அதை பூர்த்தி செய்வது என்பது இலகுவான காரியமல்ல. ஆனாலும், உங்கள் எதிர்காலத்தை வளமாக்கக்கூடிய பெறுமதி வாய்ந்த தகைமையை உங்கள் வசம் நீங்கள் கொண்டுள்ளீர்கள். SLIIT இன் நற்பெயர் மற்றும் உயர் நியமங்களின் பிரகாரம், வேகமாக மாறி வரும் உலகில் நீங்கள் கொண்டுள்ள அறிவு மற்றும் திறன்கள் போன்றன உங்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்திருக்கும். நிபுணத்துவம் வாய்ந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, நவீன, புறத் தோற்றம் கொண்ட இலங்கையை உருவாக்கிட வலுவூட்டுவதாக அமைந்திருக்கும்.´ என்றார்.
இந்நிகழ்வில் ரைகம் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஸ்தாபகருமான கலாநிதி. ரவி லியனகே கருத்துத் தெரிவிக்கையில், ´முன்னரைப் போலன்றி, சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான தேவை பெருமளவு அதிகரித்துள்ளது. பட்டதாரிகளால் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மிகவும் அதிகமான காணப்படுகின்றன. இலங்கையில் போதியளவு வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்களை காண முடியவில்லை. இளம் பட்டதாரிகள் எனும் வகையில், நாட்டின் எதிர்கால உயிர் நாடியாக நீங்கள் அமைந்திருப்பீர்கள். இந்த சமச்சீரின்மையை எமக்கு சாதகமாக அமைத்துக் கொள்வதற்கான முழு பொறுப்பையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள்.´ என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ´உங்கள் கல்விப் பயணத்தில் இன்றைய தினம் மிகவும் முக்கியமான தருணமாக அமைந்துள்ளது. ஆனாலும், உங்கள் வாழ்க்கையில் அதிகளவு சவால்கள் நிறைந்த, அதிகளவு கேள்வி நிறைந்த மற்றுமொரு அத்தியாயத்தின் ஆரம்பமாக இது அமைந்துள்ளது. எதிர்காலத்தில் வெற்றிகரமாக அமைந்திருப்பதற்கு, உலகில் இடம்பெறும் விடயங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு பிடித்ததை, நாட்டுக்கு பொருத்தமானதை செய்யுங்கள். தொழில் தருநர்களை இந்நாடு விரும்புகின்றது.´ என்றார்.
பட்டமளிப்பு நிகழ்வில் பட்டங்களை பெற்றுக் கொண்ட 376 புதிய பட்டதாரிகளில், சிறந்த வகையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும், பணப் பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தன.