இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று சினிமா படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்கிறார்.
மறைந்த அல்லது வாழும் பிரபலங்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் நோக்கம் மட்டுமே இருந்த வாழ்க்கை வரலாற்று சினிமா படங்கள், தற்காலத்தில் வணிக லாபம், அரசியல் நோக்கம், கொள்கைப் பரப்புரை என பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் என அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படங்கள் உருவாகி வருகின்றன.
அது மட்டுமல்ல, கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் டோனி, சச்சின் தெண்டுல்கர் வாழக்கை வரலாறும் சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அந்த வரிசையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாறு குறித்து தயாரிக்கப்படும் “சபாஷ் மிது” படத்தில் நடிகை டாப்சி பன்னு நடிக்க உள்ளார். “சபாஷ் மிது”வை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ரெய்ஸ் ஹெல்மர் ராகுல் தோலாகியா இயக்குகிறார். ‘மிதாலி ராஜ்’ ஆக டாப்சி பன்னு நடிக்க உள்ளார்.