மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம் ரவி உடல் தோற்றத்தை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயம் படம் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. இந்த படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்கி இருந்தார். இதை தொடர்ந்து எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உயர்ந்தார். அதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, பின்னர் பேராண்மை, ஆதி பகவன் ...
Read More »குமரன்
மாணவர்கள் போராட்டம் பற்றி சர்ச்சை கருத்து- ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம்
மாணவர்கள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு மாநிலமான அசாமில் தொடங்கிய இந்த போராட்டம் பின்னர் மேற்கு வங்கத்துக்கும் பரவியது. அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடிக்கவே இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கான போராட்டம் நாடு முழுவதும் பரவியது. களத்தில் மாணவர்களும் இறங்கினார்கள். மாணவர்களின் போராட்டம் குறித்து நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகி உள்ளது. அதாவது, மாணவர்கள் விடுமுறை கிடைக்கும், பெண்கள் ...
Read More »பத்திரிகையாளர் கசோகி கொலை : ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!
பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை செய்யப்பட்டார். சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பல ஆதாரங்கள் சிக்கின. அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 11 பேர் கைது ...
Read More »இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரலாற்றுக் கடமை பிரிட்டனுக்கு உண்டு!
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் ஸ்தாபகரும், செயலாளர் நாயகமுகமான நீதியசரர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொன்சர் வேட்டிவ் கட்சியைச் சோந்த பிரதமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்றியை ஒட்டி அவருக்கு அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில் விக்னேஸ்வரன் மேலும் ...
Read More »கடந்த அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்கான ஆதாரங்கள்……!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் அரசாங்கத்தின் வீண் செலவுகள் தொடர்பான ஆதாரங்களை ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார் என்று தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ...
Read More »ஆஸ்திரேலிய ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுமார் 40 அகதிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார் 33வயது குர்து அகதி மோஸ். மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட சுமார் 40 அகதிகளும், பல மாதங்களாக மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மனுஸ்தீவில் சுமார் 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்களுக்கு முன்பு ஆஸ்மா சிகிச்சைக்காக தன்னை ஆஸ்திரேலியா கொண்டு வந்ததாகக் கூறுகிறார் அகதி மோஸ். “வந்ததிலிருந்து எனக்கு ...
Read More »வைராக்கிய அரசியல் நன்மை பயக்காது!
தெற்காசியப் பிராந்தியத்தில் ஜனநாயகம் நிலவுகின்ற நாடுகளில் ஒன்றாக இலங்கை கணிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜனநாயக ஆட்சி நிலவுகின்றது. பல்லின மக்களும் பல மதங்களைப் பின்பற்றுவோரும் இங்கு ஐக்கியமாக வாழ்கின்றார்கள் என்ற பொதுவானதோர் அரசியல் பார்வையும் உண்டு. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கோரி முப்பது வருடங்களாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் இந்த ஜனநாயகக் கணிப்பு நிலவியது என்பது கவனத்துக்குரியது. உண்மையில் இங்கு ஜனநாயகம் நிலவுகின்றதா என்பது விமர்சனப் பண்புகளைக் கொண்ட முக்கியமான கேள்வி. தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜனநாயகத்துக்குக் ...
Read More »குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள்!
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத நடிகர்கள் கோழைகள் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தலைவி பட சூட்டிங்குக்காக ஐதராபாத்தில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவத், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, தன்னுடைய கருத்துக்களை பேட்டியாக அளித்திருக்கிறார். அதில், திரையுலக பிரபலங்களை அவர் விமர்சித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, வாய் திறக்காத பாலிவுட் நடிகர்கள் வெட்கப்பட வேண்டும். பாலிவுட்டில் அனைவரும் கோழைகள். அவர்கள், தினமும் இருபது முறை ...
Read More »அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!
அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பாக ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ விளங்குகிறது. அந்நாட்டில் மருத்துவம் சாராத அறிவியல் மற்றும்பொறியியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு இந்த அறக்கட்டளை கணிசமான உதவிகளை செய்து வருகிறது. இதுதவிர, அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றி வருகிறது. இதனிடையே, இதன் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த பிரான்ஸ் கார்டோவாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. ...
Read More »சம்பந்தனும் சுமந்திரனும் நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்துக்கொள்ளும்!
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. அவர்களுக்கு வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்பார்கள். எவ்வாறு நடந்துகொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்கேற்றவாறு நடிப்பார்கள். கொள்கைகள் பற்றி அவர்கள் எவருமே அலட்டிக்கொள்வதில்லை என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி..வி. விக்கினேஸ்வரன் அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு ...
Read More »