யாழ்ப்பாணம், மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (06) அதிகாலை 12.15 மணியளவில் வாள் மற்றும் கொடாரிகளால் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று தொடர்ந்தும் அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. சாவகச்சேரி காவல் துறை மற்றும் 119 அவசரகாவல் துறைக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு காவல் துறை உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் ...
Read More »குமரன்
முகமூடிக் கும்பல் வீடு புகுந்து தாக்குதல்!
முகங்களை மூடிய மூன்று பேர் வீடொன்றில் புகுந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மூவரும் வீட்டுக்கு வெளியே இருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடித்து நொருக்கியதுடன், மூதாட்டி ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
Read More »அவுஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கையாளரின் மரணம்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி விலவூட் அகதிகள் தடுப்பு முகாமில் நேற்று முன்தினம் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விலவூட் தடுப்புமுகாமில் வாழ்ந்த Sierra Leone-ஐ சேர்ந்த 33 வயது நபர் ஒருவர் ஜனவரி இறுதியில் உயிரிழந்திருந்த பின்னணியில் கடந்த 6 வாரங்களுக்குள் அங்கு இடம்பெற்றுள்ள 2வது உயிரிழப்பு இதுவெனக் கூறப்படுகிறது. ஈராக் பின்னணி கொண்ட புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரே நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் சடலமாக தனது அறையிலிருந்து மீட்கப்பட்டதாக அகதிகள் செயற்பாட்டாளர் Ian Rintoul தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் ...
Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன்!- ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற்று, நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்று சிறப்பை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலாரி தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் 2020ம் ...
Read More »ஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்!
இரட்டை செல்ஃபி கேமராக்களை கொண்ட ஸ்லைடிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் செவ்வக வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன்களையே சமீப காலங்களில் உருவாக்கி வந்திருக்கின்றன. இதனை சற்று மாற்றிக் கொள்ளும் முயற்சியில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன. ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் மாற்றத்தை விரும்பிய நிறுவனங்கள் மோட்டாரைஸ் செய்யப்பட்ட ஸ்லைடர் வடிவமைப்பு, இரட்டை டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் பன்ச் ஹோல் கேமராக்களுடன் சமீபத்திய ...
Read More »புஷ்வாணமாகும் கோரிக்கைகள்!
சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகிப்போயிருக்கும் தீர்வு விடயங்களில், முன்னேற்றம் காணப்படுகிறதா என்பது சந்தேகம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் கோரி நிற்கும் தீர்வு, அவர்களது அபிலாஷைகள், யுத்தத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அநீதிகளுக்கான தீர்வு என்பனவற்றை நிவர்த்திக்கும் வகையிலானதாக அமைதல் என்பது, தென்னிலங்கை அரசியல்ப் போக்கைப் பொறுத்தவரையில் சாத்தியமானதொன்றாக அமைய முடியுமா என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. ஜனநாயகத்துக்கான போராட்டம், இலங்கை தேசத்தில் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படும் நிலையில், இதன் விழுமியங்களைக் காப்பதற்கு, ஏதுவான வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா என்பது தொடர்பில், சிந்திக்க வேண்டும். ...
Read More »பாதீடு தோல்வியடைந்தால் பதவி விலகவேண்டும்!
இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தால், அரசாங்கம் பதவி விலகவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்லை இலக்கு வைத்தே அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Read More »கண்ணகிபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு!
கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியல் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து காவல் துறை நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைவாகவே மேற்படி தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
Read More »ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?
புல்வாமா தாக்குதலை ஒரு விபத்து என்று குறிப்பிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு பதிலடி தரும் வகையில் ‘ராஜீவ் காந்தியின் மரணம் படுகொலையா, விபத்தா?’ என மத்திய மந்திரி வி.கே. சிங் கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய் சிங். சர்ச்சை கருத்துகளால் அவ்வப்போது அக்கட்சியை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளுவதுண்டு. அவ்வகையில், தற்போது புல்வாமா தாக்குதல் ஒரு விபத்து என அவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து பொதுமக்களிடையில் கொந்தளிப்பை உண்டாக்கியதுடன் அரசியல் வட்டாரத்திலும் ...
Read More »சிறை தண்டனை பெற்றவர்கள் அவுஸ்ரேலியா வரத்தடை!
உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் ஈடுபட்டு, 1 ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என அந்நாடு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மந்திரி டேவிட் கோல்மேன் கூறுகையில், “உள்நாட்டில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் வரவேற்கப்படமாட்டார்கள்” என கூறினார். ...
Read More »
Eelamurasu Australia Online News Portal