தவறான தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனுக்கு சயனைடு கலந்த ஜூஸ் கொடுத்து தற்கொலை என்று நாடகமாடிய இந்தியப் பெண்ணுக்கும், முன்னாள் காதலருக்கும் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறை தண்டனை விதித்து ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்தியப் பெண் தனது காதலருக்கு எழுதிய டைரிதான் இருவரும் சிக்குவதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதனால், இந்தியப் பெண்ணுக்கு 22 ஆண்டுகளும், காதலனுக்கு 27 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த சோபியா ஷாம் (வயது34). இவரின் முன்னாள் காதலர் அருண் கமலாசன் ...
Read More »குமரன்
விடுதலைப் புலிகளின் சீருடை வைத்திருந்த இருவர் கைது!
முல்லைத்தீவு-ஒட்டுச்சுட்டான் பிரதேசத்தில், தழிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை, கொடி உள்ளிட்ட உபகரணங்களுடன்,முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என, காவல் துறையினர் தெரிவித்தனர். ஒட்டுச்சுட்டான் பேராறு பகுதியில் வைத்து, முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »“ஒரு பெண் போராட்டத்தில் கலந்துகொள்வதே போராட்டம்தான்!”
“அநாதை விடுதியிலதான் தங்கிப் படிச்சேன். அங்கயிருந்து கூப்பிடும் தொலைவுலதான் என் வீடு இருந்தது” – முரணோடு பேசத் தொடங்குகிறார் லட்சுமி அம்மா. எளிய மனிதர்களின் உரிமைகளுக்காக 40 வருடங்களாக வீதிகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த போராளி. தஞ்சாவூர் அருகே வல்லம் கிராமத்தில் பிறந்து, வேலை செய்யுமிடத்தில் அறிமுகமான தொழிற்சங்கத்தை இறுகப்பிடித்துக்கொண்டவர். அது அவரை முழுநேர அரசியலில் இறக்கிவிட்டது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசனின் வாழ்க்கைத் துணையானது, லட்சுமி அம்மாளின் வாழ்க்கையைப் போராட்டக் களங்களுடன் இன்னும் பிணைத்தது. “பெண்களைப் படிக்கவைக்க ஆர்வம் காட்டாத காலம் அது. ஆனா, ...
Read More »ஆஸி. நிர்ணயித்த 311 ரன்கள் இலக்கு நிர்மூலம்!
செஸ்ட்ர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து, இதன் மூலம் 4-0 என்று ஒயிட்வாஷுக்குத் தயாரானது இங்கிலாந்து. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் சதங்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது, இலக்கை விரட்டிய இங்கிலாந்து ஜேசன் ராயின் 83 பந்து சதத்தினாலும் பேர்ஸ்டோ, பட்லர் அதிரடியில் 45வது ஓவரில் 314/4 என்று வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைசி ...
Read More »அவுஸ்திரேலிய தமிழ்க் குடும்பத்தின் நாடுகடத்தல் உறுதி!
அவுஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியிருந்த நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலைத் தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா வந்த நடேசலிங்கம்-பிரியா தம்பதி மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 2 வயது மற்றும் பத்துமாத குழந்தைகள் பல காலமாக குயின்ஸ்லாந்தின் Biloela-வில் வாழ்ந்து வந்தனர். இவர்களுடைய bridging visa கடந்த தை – மாசி மாதமளவில் காலாவதியாகியிருந்தது. இதனை அடுத்து நாடு கடத்தப்படும் நோக்கில் கடந்த 100 நாட்களுக்கும் ...
Read More »விரைவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம்!
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52 மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது. இத்துடன் ...
Read More »வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி!- டிரம்ப் பெருமிதம்
அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார். எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக ...
Read More »வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு தாயகம் திரும்பத்தடை!
வெளிநாடுகளில் வசிக்கின்ற 14 தமிழர்களுக்கு இலங்கை வருவதற்கு தடை விதித்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது. 20ம் திகதி குறிக்கப்பட்ட இந்த வர்த்தமானியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியாரத்ன வெளியிட்டுள்ளார். குறித்தப் 14 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டு 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதிகளின் இலக்கம் 4(7) ஒழுங்குவிதியின் கீழ் பெயர் குறிக்கப்பட்ட ஆட்கள் பற்றிய நிரலில், தனியாட்கள் என்றத் தலைப்பின் கீழ், இதற்கான திருத்தம் ...
Read More »காணாமல் போன விடுதலைப்புலிகளில் 351 பேரின் பட்டியல்!
யுத்தத்தின் இறுதியில் காணாமல் போன விடுதலைப்புலிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கமைவாக இந்த விரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 351 பேரின் பெயர் விபரங்களே இந்த பட்டியலில் உள்ளதாக அவதானிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. யோகி, இராணுவப்பேச்சாளர் இளந்திரையன், கல்விக்கழக பொறுப்பாளர் பேபி சுப்ரமணியம், எழிலன், இளம்பரிதி மற்றும் இராணுவத்துறையை சேர்ந்த ரமேஸ், வீமன், கீர்த்தி, நாகேஷ், தினேஸ் மாஸ்டர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதிகள் வேலவன், ஆராவமுதன், வீமன், லோரன்ஸ், மஜீத், ...
Read More »80 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணைய ஊடகங்களுக்கு எதிராக விசாரணை!
சிறிலங்கா அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையிலான தகவல்களை பரப்பும் 80 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையங்கள் பற்றிய தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ள சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரட்ன அவற்றுக்கெதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில் இவற்றில் சுமார் 40 இணையத்தளங்கள் இனக்குரோதத்தைத் தூண்டும் அடிப்படையில் செயற்படுவதாகவும் கூறினார். இலங்கையில் சமூக வலைத்தளங்கள் பற்றிய கூகுள் வரைப்படங்களும் கிடைத்துள்ளன. இவற்றின் அடிப்படையில் விரைவில் விசாரணைகள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal