emurasu

குயின்ஸ்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள் இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia

Read More »

அடேலையிட்டில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

அடேலையிட் மாநிலத்தில் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் பதிவுகள் இந்நிகழ்வு பற்றிய எஸ்பிஎஸ் தமிழ் வானொலி பதிவு https://www.sbs.com.au/language/tamil/audio/a-compilation-of-maaveerar-naal-events-from-cities-in-australia

Read More »

சிட்னியில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர் நினைவுநாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் எழுச்சிபூர்வமாக நினைவுகூரப்பட்டது. வெள்ளிக்கிழமை 27-11-2020 மாலை 5.45 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு Blacktown Bowman Hall எனும் மண்டபத்தில் நடைபெற்றது. பொதுச்சுடரினை மட்டுநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட, 1998 மே 23ஆம் நாள் வீர காவியமாகிய சண்முகம் சந்திரறோகான் என அழைக்கப்படும், கப்டன் புவிராஜ் அவர்களது சகோதரி சந்திரப்பிரபா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை அவுஸ்திரேலிய அரசியல் களத்தில் செயற்பட்டுவருபவரும் தமிழர் ...

Read More »

ஒலுமடு ஆதிலிங்கேகேஸ்வரர் திருவிழாவுக்கு நீதிமன்றம் அனுமதி!!

நெடுங்கேணி ஒலுமடு ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தை தடுக்கக் கோரி நெடுங்கேணிப்பொலிசாரினாலும் தொல்லியல் திணைக்களத்தினாலும் வவுனியா நீதிமன்றத்தில் கோரப்பட்ட விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. ஆலய உற்சவத்தை வழமைபோன்று நடாத்தவும் மன்று அனுமதிவழங்கியுள்ளது. திருவிழாக்காலங்களில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதுவித இடையூறோ அச்சுறுத்தலோ செய்யக்கூடாது எனவும் நெடுங்கேணி பொலிசாருக்கு நீதவான் பணிப்பு வழங்கியுள்ளார். குறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சிற்றம்பலம் தலைமையில் சிரேஷ்ட சட்டத்தரணி காண்டீபன்இ சிரேஷ்ட சட்டத்தரணி தயாபரன்இ சிரேஷ்ட சட்டத்தரணி திருவருள்இ சிரேஷ்ட சட்டத்தரணி குருஸ் உள்ளிட்ட பதினாறு சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை

தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவையொட்டி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை தமிழின விடுதலைக்காக பல்வேறு தளங்களிலும் செயற்பட்டு, ஓய்வற்று உழைத்து, ஒப்பற்ற பெருமனிதராக வாழ்ந்த “பத்மநாதன் ஐயா” என அனைவராலும் அழைக்கப்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் தம்பாப்பிள்ளை அவர்களின் மறைவுச்செய்தி அனைவரையும் கவலை கொள்ளச்செய்கின்றது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழ்ந்த பத்மநாதன் ஐயா, தாயகவிடுதலை போராட்ட காலத்தில் தாயகத்திற்கான தேவைகளை நிறைவுசெய்வதில் மிகவும் அர்ப்பணிப்போடு மிகவும் அமைதியான முறையில் பணியாற்றியவர். விடுதலைப் போராட்ட வட்டத்திற்கு வெளியே நின்ற ...

Read More »

மெல்பேர்ணில் ஊதிய திருட்டு! பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கும் நிவாரணம்!!

மெல்பேர்ணில் உள்ள மீள்சுழற்சி நிறுவனம் ஒன்றில் பணியில் ஈடுபட்டவர்களின் ஊதியம் திருட்டு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது ஒரு மில்லியன் டொலர்கள் வரையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பெரும்பாலான தமிழ் அகதிகள் உட்பட 30 பேருக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான வேலைத்தளச்சூழலில் ஏழு நாட்களும் வேலைசெய்த இந்த இளைஞர்களில் சிலருக்கு 60000 டொலர்களுக்கு மேற்பட்ட நிதியும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களே அங்கு சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கு 25000 டொலர்களும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொழிலாளர்கள் சமாசத்தால் விக்ரோரிய மாநில ஒம்புட்சுமனுக்கு முறையீடு ...

Read More »

பிரான்சில் தீவிபத்து – ஈழத்தமிழர் ஒருவர் சாவு!

நேற்று முன்தினம் புதன்கிழமை பரிசில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் சாவடைந்துள்ளார். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Place d’Italie தொடருந்து நிலையம் அருகே boulevard Vincent Auriol வீதியில் உள்ள உள்ள 168 இலக்கக் கட்டிடத்தின் நான்காவது தளத்தின் ஒரு வசிப்பிடத்தினுள்ளேயே மு.ப 10:30 மணி அளவில் தீ பற்றியுள்ளது. சம்பவ இடத்திற்குக் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்தனர். 60 தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைத்து மு.ப. 11:30 முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கட்டிடத்தின் நான்காவது தளம் ...

Read More »

இரகசிய செயற்பாடு அம்பலம்! அவுஸ்திரேலிய தமிழர் பேரவை வெளியேறியது!!

2009 இற்கு பின்னர், சனநாயக வழியில் பெருங்கட்டமைப்பாக உருவாக்கி உலகத்தமிழர் பேரவையாக (GTF) செயற்படுவது நல்லது என தீர்மானித்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கனதியாக வாழும் நாடுகளில் கிளை அமைப்புகளை நிறுவி, அவுஸ்திரேலியாவில் உருவான ATC உம் அதனுடன் இணைந்தது. ஆனால் சில வருடங்களில், இம்மானுவேல் பாதிரியாரும் சுரேந்திரனும் சுமந்திரனுடன் இணைந்து அதன் நோக்கத்தை திசைதிருப்பி, சிறிலங்கா அரசுக்கு வெள்ளையடிக்க தலைப்பட்டனர். இப்போது, இன்றைய தேர்தலில் கூட்டமைப்பை ஆதரிக்குமாறும் குறிப்பாக சுமந்திரனை தெரிவு செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முடிவை மேற்குறிப்பிட்ட மூவரின் சதி எனவும். ...

Read More »

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலவீனங்கள் என்ன பட்டியலிடுகின்றார் மணிவண்ணன்!

எதிர்வரும் தேர்தலில் தமிழர் தாயகப்பகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தேர்தலில் போட்டியிடுகின்ற அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தனது கட்சியின் பலம் என்ன பலவீனங்கள் என்ன என்னவென்பதை வெளிப்படுத்தினார். கடும் சவால்களுக்கு மத்தியில் வளர்ந்த தமது கட்சி தற்போது மிகப்பெரிய மாற்றத்தை உறுதியாக உருவாக்கும் எனக்கூறும் அவர் வெளியிட்ட கருத்துக்களின் தொகுப்பை இக்காணொளியில் காணலாம்.  

Read More »