மெல்பேர்ணில் உள்ள மீள்சுழற்சி நிறுவனம் ஒன்றில் பணியில் ஈடுபட்டவர்களின் ஊதியம் திருட்டு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது ஒரு மில்லியன் டொலர்கள் வரையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய பெரும்பாலான தமிழ் அகதிகள் உட்பட 30 பேருக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மிகவும் கடினமான வேலைத்தளச்சூழலில் ஏழு நாட்களும் வேலைசெய்த இந்த இளைஞர்களில் சிலருக்கு 60000 டொலர்களுக்கு மேற்பட்ட நிதியும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களே அங்கு சேவையில் ஈடுபட்ட ஒருவருக்கு 25000 டொலர்களும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய தொழிலாளர்கள் சமாசத்தால் விக்ரோரிய மாநில ஒம்புட்சுமனுக்கு முறையீடு செய்யப்பட்ட நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.