இலக்கியமுரசு

கங்காரு நாட்டில் சாதனை படைத் ஈழத்து மாணவன்!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து, மாநிலத்தில் முதலாவதாக, செல்வன் ஹரிஷ்ணா செல்வவிநாயகன் வந்திருக்கின்றார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன் – பத்மினி தம்பதியின் சிரேஷ்ட புதல்வனான ஹரிஷ்ணா, அவுஸ்திரேலியாவில் பிறந்து ஆரம்பக் கல்வி முதல் வென்ற்வேர்த்வில் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் மொழியைக் கற்றார். கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள இம்மாணவனின் பெறுபேறுகள், இன்று (12) வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத் திணைக்களம், தொலைபேசியூடாகப் பெறுபேற்றை கடந்த வெள்ளிக்கிழமை (7) அறிவித்தபொழுது அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, ...

Read More »

பாதியில் முறிந்த பயணம்!

எஸ்.சம்பத் சிந்தனை உலகுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இருக்க வேண்டிய அவசியமான உறவின் இசைமையைப் புனைவின்வழி அற்புதமாகப் பிணைத்தவர் சம்பத். அடிப்படை விஷயங்களில் உழலும் புனைவு மனம் இவருடையது. ஆண்-பெண் உறவும் சாவும் இவரைப் பெரிதும் வாட்டிய விஷயங்கள். அவருடைய சிறுகதைகளும் குறுநாவல்களும் ஒரே நாவலான ‘இடைவெளி’யும் இத்தன்மைகளில் உருவாகியிருக்கும் படைப்புகளே. தன் அனுபவங்களின் ஊடாக அறியவரும் வாழ்வின் விசித்திர குணங்களும், அனுபவங்களின் சாரத்தில் உருக்கொள்ளும் கருத்துகளும் கேள்விகளும் அலைக்கழிப்புகளும் சம்பத்தின் புனைவுப் பாதையை வடிவமைக்கின்றன. அந்தப் பாதையில் உள்ளுணர்வின் ஒளியோடு பிரச்சினைகளுக்கான விடைகளைத் தர்க்கரீதியாகக் ...

Read More »

கடவுள் இருக்கிற இடத்துல இருக்கார்!- ந.முத்துசாமி

ந.முத்துசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ நூலே தமிழ்ச் சிறுகதைத் துறையின் சாதனைகளில் ஒன்றுதான். பேச்சுக்கும் பேசாமல் இருப்பதற்கும் இடையில் இருக்கும் மன மூட்டத்தை, தத்தளிப்பை, உளவியல் அவசங்களை நனவு நிலை ஓட்டத்தை வெற்றிகரமாகத் தன் கதைகளில் கைப்பற்றியவர். ‘தமிழின் பாரம்பரிய தியேட்டர்’ என்று தெருக்கூத்து வடிவத்தைச் சொன்னவர். சிறுகதை எழுதுவதை விட்டுவிட்டு, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை நாடகத்துக்காகவும் கூத்து தொடர்பான ஆய்வுகளுக்காகவும் அர்ப்பணித்தார். தெருக்கூத்தை செவ்வியல் நிகழ்த்துக்கலையாக உலக அளவில் நிலைநிறுத்தியவர். ‘கூத்துப்பட்டறை’ அமைப்பின் நிறுவனர். சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ ...

Read More »

தி.ஜானகிராமன்: அன்பின் நித்தியச் சுடர்!

தி.ஜானகிராமனின் படைப்புகள் பெரும்பான்மை வாசகர்களின் வசீகரிப்புக்கும் அதேசமயம், தீவிர இலக்கிய வாசகர்களின் ஈர்ப்புக்கும் இடமளித்தவை. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜானகிராமனுக்கும் ஜெயகாந்தனுக்கும் மட்டுமே இது சாத்தியமாகியிருக்கிறது. ஜெயகாந்தன் தன் காலத்துக்குரிய கருத்துரீதியான கதையாடல்கள் மூலம் இதை சாத்தியப்படுத்தினார். ஜானகிராமன் என்றென்றைக்குமான உணர்வுகளின் நெகிழ்ச்சியான கதையாடல்கள் மூலம் இத்தன்மையை வசப்படுத்தினார். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளில் தத்துவார்த்த ஒளி கூடிய புதிய வெளிச்சம் சுடர்விட்டது. அன்பு, காதல், ஆன்மா, வாழ்வின் அர்த்தம் என்றாக அமைந்த நவீன செவ்வியல் படைப்புகளை ஸ்வீடனின் ...

Read More »

மக்களின், மக்களால், மக்களுக்காக…

சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தையும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நம்பியாராமல், மக்கள்  ஒன்றிணைந்து தமது தேவைகளை தாமாகவே பூர்த்தி செய்யும் செயற்பாடுகள் உருப்பெறத் தொடங்கி விட்டன. அண்மையில் இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னர், இளைஞர்கள் ஒன்றிணைந்து மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதும் இந்த வகையில் அடங்கும் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் தன்னார்வ அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக ஒன்றிணையும் மக்கள், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றாடல் போன்ற விடயங்களில், அரசாங்கத்தை பகைக்கா வண்ணம், தங்களைத் தாங்களே ...

Read More »

மரணம் ஒரு கலை!

மத்திய தரைக்கடலை அள்ளிப் பருகுவதைப் போல் அமைந்துள்ள கிரேக்க நாட்டின் கிழக்கில் அமைந்துள்ளது. ஏதென்ஸ் உலக நகரங்களிலேயே தனித்துவமானது. நிலவியலாளர்களும், கணித வல்லுநர்களும், கவிஞர்களும், மெய்யியலாளர்களும் வீதிக்கு வீதி நடமாடிய அறிவுலகம். முதன்முதலில் உலக நாடுகளுடன் கடலோடி செல்வத்தில் செழித்த நகரம். அறிவை நேசித்த, அறிவாக உருப்பெற்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் முகப்பினை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர் தத்துவஞானி சாக்ரடீஸ். குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் ...

Read More »

கணிதத்திற்கு ‘நோபல் பரிசு’ வென்றுள்ள ஆஸ்திரேலியத் தமிழர்!

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை கணிதத் துறையில் சாதனை புரிந்தவர்கள் மற்றும் புதிய சிந்தனைகளை வளர்ப்பவர்கள் என்று கருதப்படும் 40 வயதிலும் குறைந்தவர்களுக்கு வழங்கப்படும் “Fields Medal” விருது, கணிதத்திற்கான ‘நோபல் பரிசு’ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த விருது இரண்டு முதல் நான்கு கணித மேதைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடம், இந்த விருது நால்வருக்கு வழங்கப்படுகிறது. அதில், 16 வயதிலேயே மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அக்‌ஷய் வெங்கடேஷ் என்ற பேராசிரியரும் ஒருவர். தற்போது 36 வயதான பேராசிரியர் அக்‌ஷய் வெங்கடேஷ் அமெரிக்காவின் ...

Read More »

சிறந்த சமையலாளருக்கான போட்டியில் (Master Chef Australia) சசி செல்லையா வெற்றி!!

2018 ஆம் ஆண்டுக்கான ஆக சிங்கப்பூரில் பிறந்து தற்போது தென் அவுஸ்திரேலியாவில் வாழும் சசி செல்லையா வெற்றியடைந்துள்ளார். சிங்கப்பூரில் பிறந்த 39 வயதான சிவா அவுஸ்திரேலியாவுக்கு 2011 இல் குடி பெயர்ந்தார். தற்போது அடலெய்ட் நகரில் சிறை அதிகாரியாகப் பணியாற்றும் இவர் Master Chef Australia ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் முதற்தடவையாக 93 புள்ளிகளை அதிகூடிய புள்ளிகளாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More »

“தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”!

வின்சென்ட் வான் கா  தன் அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்ச ஓவியர்களையும் நண்பர்களையும் பங்கெடுக்கச் செய்யவேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தார் தியோ. மனம் வான் காவையே நினைத்துக் கொண்டிருந்தது. “தற்கொலை செய்துகொள்வதைவிட வாழ்க்கையை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது எவ்வளவு மகத்தானது”  என்று எழுதிய வான் கா, தற்கொலையின்மூலமே மரணத்தைத் தேடிக்கொண்டார். வான் காவின் சவப்பெட்டியைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஓவியங்களில் வண்ணத்தின் ஈரம்கூட காயவில்லை. வான் காவுக்கு விருப்பமான சூரிய காந்திப் பூக்களால் சவப்பெட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரை அமைதிப்படுத்தும் கான்வாஸும், மடிப்பு ஸ்டூலும், திறந்திருந்த வண்ணக்குழம்புகளும் அருகில் ...

Read More »

பா. அகிலனின் அரசியல் மொழி!- சேரன்

பா. அகிலன் கவிதைகள் கீதா சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘Then There Were No Witnesses’ எனும் தலைப்பில் இருமொழிப் பதிப்பாகவும் கூடவே அகிலனின் ‘அம்மை’ கவிதைத் தொகுப்பும் ஜுன்17 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது. நிகழ்வில் Then There Were No Witnesses பற்றி நாவலாசிரியர் ஷியாம் செல்வதுரை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிய மொழிகளில் எழுதும் கவிஞர் இந்திரன் அமிர்தநாயகம், கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான நீத்ரா ரொட்ரிகோ, நூலை வெளியிட்ட மவ்ந்ன்ஸி பதிப்பகம் சார்பில் எழுத்தாளர் நூர்ஜஹான் அஸீஸ் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றினர். ‘அம்மை’ தொகுப்பைப் பற்றியும் ...

Read More »