குமரன்

கொரோனா பாதிப்பை மறைத்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம் தனக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பினை ரகசியமாக மறைத்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரசின் பாதிப்புகளுக்கு உலக நாடுகளை கட்டியாண்ட இங்கிலாந்து நாடும் தப்பவில்லை.  இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கடந்த மார்ச் இறுதியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  பின்னர் அதில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார். இதேபோன்று, இங்கிலாந்து அரச குடும்பமும் இதற்கு விதிவிலக்கில்லை.  இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகன் மற்றும் இங்கிலாந்து இளவரசரான சார்லஸ், கடந்த மார்ச் ...

Read More »

கொரோனா பாதிப்பு – ராஷ்மிகா எடுத்த அதிரடி முடிவு

கொரோனா பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கொரோனாவால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் வற்புறுத்தப்பட்டு உள்ளது. விஜய் ஆண்டனி, தான் நடிக்கும் 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால் தற்போது நடித்து வரும் திரிஷ்யம் படத்துக்கு சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளார். இதே படத்தில் நடிக்கும் மீனாவும் சம்பளத்தை குறைத்து ...

Read More »

ஆஸ்திரேலியா: 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் புதிதாகக் கிருமித்தொற்று இல்லை

ஆஸ்திரேலியாவில், கடந்த 5 மாதங்களில் முதன்முறையாக, உள்ளூர் அளவில் யாருக்கும் கிருமித்தொற்று உறுதிசெய்யப்படவில்லை. ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்ட விக்டோரியா மாநிலத்தின் மெல்பர்ன் நகரில், முடக்கநிலை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அங்கு உணவகங்களிலும் மதுபானக் கூடங்களிலும் திரண்டுள்ளனர். விக்டோரியா மாநிலத்தில், 60 பேருக்கு இன்னும் கிருமித்தொற்று உள்ளது. அவர்களில் ஒருவருக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

Read More »

கேள்விக்குச் சரியாகப் பதிலளித்தசிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

கடையிலிருந்து 5 வினாடியில் எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையின் (Offers)  கீழ் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சிறுவன் ஒருவன் அள்ளிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. அமெரிகாவில்  பல்பொருள் அங்காடியொன்றில் சிப்ஸ் பக்கெட் வாங்க வந்த சிறுவனிடம் கௌண்டரில் நின்ற நபர், கணித கேள்வி ஒன்றை கேட்டார். அதற்கு சரியாக பதிலளித்த சிறுவனுக்கு பரிசாக 5 வினாடியில் கடையிலிருந்து எடுக்கும் பொருட்கள் அனைத்தும் இலவசம் என்ற சலுகையை அவர் அளித்தார். இதன் மூலம், உணவுப்பொருட்கள், அப்பிள் ஏர்போட்கள் உள்ளிட்டவைற்றை எடுத்து சிறுவன் ...

Read More »

கூட்டமைப்பின் செயலாளராக மாவை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டமைப்பில் அதிரடியான மாற்றங்களைச் செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று கூடிய பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இதன்படி கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை நியமிக்கப்படவுள்ளார். யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சி அலுவலகத்தில் இன்று பகல் நடைபெற்ற பங்காளிக் கட்சிகளின் கூட்டத்தில் இது உட்பட அதிரடியான மாற்றங்கள் சிலவற்றை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பிரமுகர் ஒருவர் தினக்குரலுக்குத் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம் ...

Read More »

லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக ...

Read More »

சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் – தங்கை இலக்கியா

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை கொண்ட நடிகர் சிம்புவிடம் நிறைய மாற்றங்கள் இருப்பதாக அவரது தங்கை இலக்கியா கூறியிருக்கிறார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனது உடலமைப்பை முழுமையாக மாற்றியுள்ளார் சிம்பு. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தனது உடலமைப்பை மாற்றியவுடன், எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்களுடன் இந்த மாற்றத்துக்கு உதவிய, வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார். சிம்புவின் இந்த ...

Read More »

இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள தாக்கம் வீரியமானது!

இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அ​ந்த வைரஸ், தொற்றுநோயை பரப்பும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது பரவி வரும் கொவிட் – 19 வைரஸில், ‘B.1.42‘ எனும் ரகத்தைச் சேர்ந்த மிகவும் வீரியம் கொண்ட வைரஸாகும் என்பது இனங்காணப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே என்பவரினால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இலங்கையில் ஏற்கெனவே இனங்காணப்பட்ட கொத்தணி வைரஸ்கள் B.1, B.2, B 1.1 ...

Read More »

முஸ்லிம் பிரதிநிதிகள் ஏன் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள்?

20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே ஆங்காங்கே விமர்சனங்களை காணக்கூடியதாக இருக்கிறது “முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கூறியுள்ளார். முகநூலில் முஸ்லிம் நண்பர்கள் தமது பிரதிநிதிகளைக் கடுமையாகத் திட்டி எழுதும் ஒரு நிலைமையை காணக்கூடியதாக இருக்கிறது. ...

Read More »

ஆஸ்திரேலியா வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும்!

ஆஸ்திரேலியாவுக்கு மேலும் அதிகமான மக்கள் தேவையில்லை என 72 சதவீதமான பேர் கூறியுள்ளதாக தேசிய கருத்துக்கணிப்பின் முடிவு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அதில் 50 சதவதீம் பேர் வெளிநாட்டினர் குடிவரவை குறைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டமான அக்டோபர் மற்றும் நவம்பர் 2019ல் ஆஸ்திரேலிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தால் நடத்தப்பட்ட இக்கருத்துக்கணிப்பு மூலம். அந்நாட்டில் பலர் மக்கள் தொகை பெருக்கத்தை விரும்பவில்லை எனச் சொல்லப்படுகின்றது. எங்கள் கருத்துக்கணிப்புகள் மூலமும் பிற கருத்துக்கணிப்புகள் மூலமும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், வெளிநாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் ...

Read More »