Tag Archives: ஆசிரியர்தெரிவு

தெற்கில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதா? – நிலாந்தன்

தேர்தல் நடந்த அதே கிழமை கொழும்பில் வத்தளையில் ஒரு நட்சத்திர விடுதியில் ஒரு பயிலரங்கு நடத்தப்பட்டது. தேசியத்தைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பின் கீழான இப்பயிலரங்கில் மூவினத்தைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றினார்கள். இப்பயிலரங்கில் ஒரு நாள் ஒரு நாடகம் நிகழ்த்திக் காட்டப்பட்டது. அந்நாடகத்தின் பெயர் ‘ஒரு நாடு இரு தேசம்’. அதில் இச்சிறு தீவில் உள்ள எல்லா அரசியல் போக்குளையும் பிரதிபலிக்கும் விதத்தில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அரசியல் கட்சி பிரமுகர்களை ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்துத் தொடர்பாக பேச ...

Read More »

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான அணி அவசியம் – பேராசிரியர் கீதபொன்கலன்

அண்மையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு சவால்விடும் வகையில் மாற்று அணியாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி களம் இறங்கியிருப்பது காலத்தின் தேவை என பேராசியர் கீதபொன்கலன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணலின் முழுவடிவம்

Read More »

கூட்டமைப்பிடம் சில கேள்விகள் – நிலாந்தன்

2009 மே மாதத்துக்குப் பின்னரான  இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே  தமிழ் மக்களின்  பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது.2009 இற்குப் பின் அப்பொறுப்பை கூட்டமைப்பு வகிக்கத் தொடங்கியது.  இப்படிப் பார்த்தால் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் கூட்டமைப்பிடம் கைமாறிய பின்வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. எனவே  கடந்த ஐந்து ஆண்டுகளில்  கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

Read More »

இனி பொறுமை இல்லை! வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்ள அதிகாரம் வேண்டும் – சம்பந்தர்

அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு மேலாக வளங்கல் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு கடன்களை பெறும் வாய்ப்பும் உருவாக்கிக் கொடுக்கப்பட வேண்டும். இவையெல்லாம் உள்ளடங்கிய நல்லதொரு அரசியல் தீர்வின் மூலமே நாட்டில் நல்லாட்சியை உருவாக்க முடியும்  என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து தேசிய கட்­சிகள் தமது நிலைப்­பாட்டினை தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் தெரி­விக்க வேண் டும். இனி­மேலும் காலத்தை கடத்தமுடி­யாது. புதிய பாரா­ளு­மன்றம் அமைக்­கப்­பட்ட பின் விரை ...

Read More »

போர்க்குற்ற விசாரணையை பலவீனப்படுத்துகிறதா அமெரிக்கா? – ஹரிகரன்

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­வி­யேற்று ஆறு மாதங்கள் கழித்து, இலங்கைக் கடற்­ப­டை­யுடன் கூட்டு இரா­ணுவப் பயிற்­சி­களை ஆரம்­பித்­தி­ருக்­கி­றது அமெ­ரிக்கா. கடந்த அர­சாங்­கத்தின் பதவிக் காலத்தில் இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த, இலங்கைப் படை­யி­ன­ரு­ட­னான கூட்டுப் பயிற்­சி­களே இப்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­மலைக் கடலில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் என்று அழைக்­கப்­படும் சிறப்பு கொமாண்டோ அணி­யினர், இலங்கை கடற்­ப­டை­யி­ன­ருடன், பயிற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஜூன் 19 ஆம் திகதி தொடங்­கப்­பட்ட இந்த கூட்டுப் பயிற்சி அடுத்த மாதம், 02 ஆம் திகதி வரை தொடரும் என்று தக­வல்கள் கூறு­கின்­றன. ...

Read More »

“ஒற்றையாட்சி” பற்றி சுமந்திரன் சொல்வது உண்மையா?? – குமாரவடிவேல் குருபரன்

15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார்த்தைப் பிரயோகம் ...

Read More »

முதலமைச்சர் நிதியம் இன்னும் ஆரம்பிக்க முடியவில்லை – வடக்கு முதல்வர்

ஒரு ஜனநாயகக் கட்சிக்குள் பேச்சு சுதந்திரம் இருக்க வேண்டும். கருத்து முரண்பாடுகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் கட்சி தவறுகளை அகற்றி முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும். சுயநல எதிர்பார்ப்புக்கள் இன்றி கட்சியின் நலன் கருதி முரண்பாடுகளில் ஈடுபடுவது கட்சிக்கு நல்லது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய மின்னஞ்சல் பேட்டியில் தெரிவித்தார். அவருடனான செவ்வி வருமாறு, கேள்வி : வடமாகாண சபை முதல்வருக்கு முதலமைச்சர் நிதியம் ஒன்றை ஆரம்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இந்த ...

Read More »

ஐ.நா மனித உரிமைச்சபை உப மாநாடு: சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தல்!

சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துதாறு வலியுறுத்தும் உப மாநாடொன்று ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் செப்ரெம்பரில் சிறிலங்கா அறிக்கை ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படுமென ஆணையாளர் செயிட் ராட் அல்ஹசேன்  அவர்கள் சபையில் தெரிவித்திருந்த நிலையில் இந்த உபமாநாடு இடம்பெற்றுள்ளது. சியரா லியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும் பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffry Robertson QC, சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியரும் பிரபல மனித உரிமைவாதியுமாகிய ...

Read More »

சிங்கள மக்களை ஏமாற்றி தீர்வு காணலாம் என யாரும் நம்பகூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்மக்களை ஏமாற்றியோ சிங்கள மக்களை ஏமாற்றியோ தமிழ்மக்களுக்கு ஒரு அமைதியான நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். மாறாக வெளிப்படையான கலந்துரையாடல்கள் மூலமே அரசியல் ரீதியான விடயங்கள் அணுகப்படவேண்டும் என தமிழத்தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வழங்கும்போதே அவர் தனது கருத்தை தெரிவித்தார். இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் தொட்டே உலகத்தமிழர் பேரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியும் அனைத்துலக மக்கள் அவைகளும் நாடு கடந்த ...

Read More »

“மாற்றத்தைப்” பலப்படுத்தும் நோக்கிலான லண்டன் சந்திப்பு – நிலாந்தன்

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஒரு தன்னார்வ குழு மற்றும் சுவிட்சர்லாந்து என்பவற்றின் உதவியோடு சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சரும் கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவரும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். தேர்தல் வரவிருக்கும் பின்னணியில் முன்னய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பில் நோர்வேயின் முன்னாள் சமாதானத்துக்கான தூதுவர் சொல்ஹெய்மும் பங்குபற்றியிருக்கிறார். இது ஒரு பகிரங்கப்படுத்தப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்திப்பு என்று கூறப்பட்டாலும் இதில் பங்குபற்றியவர்கள் மற்றும் பங்குபற்றிய நிறுவனங்கள் என்பவற்றைக் கருதிக் கூறின் இது அதிகபட்சம் ...

Read More »