Tag Archives: ஆசிரியர்தெரிவு

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது. இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில் வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக கொண்டு ஊடகவியலாளாருடன் தொலைபேசி மூலம் நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 முற்பகல் தொடா்பு கொண்ட இனம் தெரியாத நபா் ஒருவா் குறித்த செய்தியை ஊடகவியலாளா்கள் கருத்து திரிபுபட எழுதி விட்டாா்கள் என்றும் சில வேளை அமைச்சா் தடுமாறி தவறாக உச்சரித்தாலும் அதனை ...

Read More »

கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

இந்திய இலங்கை மீனவர்கள் தொழிலின் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்ட கச்சதீவில் இலங்கை கடற்படை அமைத்துள்ள தளத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. இதனையடுத்து, ...

Read More »

காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக இன்று(30) இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும், மற்றும் சிறையில் விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். மேலும் குறித்த போராட்டமானது இன்று பிற்பகல் 4 மணி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக ...

Read More »

ஒட்டாவா பிரகடனத்தில் ஒப்பமா? முடியாது என்கிறது சிறீ. இராணுவம்!

இராணுவ முகாம்களை பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் அனைத்துலக பிரகடனமான ஒட்டாவா பிரகடனத்தில் அரசாங்கம் கையெழுத்திடுமென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். ஒட்டாவா என அழைக்கப்படும், அனைத்துலக ரீதியில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் பிரகடனத்தில் இதுவரை 160 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு கடந்த மார்ச் மாதம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இருப்பினும், இதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்னமும் தனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ...

Read More »

ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “ரவிராஜின் கொலையில், அரச புலனாய்வுச் சேவைக்கு (எஸ்.ஐ.எஸ்) தொடர்பு இருப்பதைக் காட்டும் சான்றுகளை, குற்றப்புலனாய்வுப் ...

Read More »

ஆழிப் பேரலையினால் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

ஆழிப் பேரலை அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று(26) உடுத்துறை மருதங்கேணி நினைவாலயத்தில் உடுத்துறை மருதங்கேணி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த நினைவாலையத்தில் காலை தொடக்கம் பொது மக்கள் தமது உயிர் நீத்த உறவினர்களுக்கு மலர்கள் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 2004 ஆம் ஆண்டு இதே நாள் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் காவு கொள்ளப்பட்டனர். அன்றைய நாள் ஏற்பட்ட வலிமையான நிலநடுக்கம் 9.3 ரிக்டர் அளவில் அறியப்பட்டது. அதனைத் ...

Read More »

ரவிராஜை மீண்டும் கொன்றுவிட்டார்கள்- சிவாஜிலிங்கம்

ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்: இலங்கை நீதிமன்றுகளின் ஊடாக தீர்வு கிடைக்காதென்ற செய்தி தற்போது உறுதியாக கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர் சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை தருமென்ற எமது நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கே.சிவாஜிலிங்கம் இனியும் உள்ளுர் விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமென தமிழ் ...

Read More »

ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று (24) சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட சிங்கள ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மன்றில் நிறுத்தப்படாத முதலாவது, இரண்டாவது ...

Read More »

விரைவில் மாவையின் சுயசரிதை!

இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தனது வாழ்க்கைப்பயணத்தை ஆவணமாக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பில் சக அரசியல் கட்சி தலைவர்கள், ஆதரவாளர்கள் தன்னை வலியுறுத்திவருவதாக மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். அண்மையில் இருளுள் இதய பூமி எனும் மணலாறு நில சுவீகரிப்பு தொடர்பான ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளிடுகையில் மணலாறின் ஒவ்வொரு அங்குலத்திலும் தனது காலடி பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனது சிறைவாழ்வு உள்ளிட்ட அரசியல் பயணத்தை ஆவணப்படுத்த சுயசரிதை நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்தார். இதே வேளை தமிழ் மக்கள் ...

Read More »

தமிழீழ மக்களுக்கு அடேல் பாலசிங்கம் அவர்களின் அவசர அறிவிப்பு

20 மார்கழி 2016 ஊடக அறிக்கை எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ஒன்றில் விதைத்து (புதைத்து), அங்கு அவருக்கான நினைவுத் தூபி ஒன்றைக் கட்டப் போவதாகவும் ...

Read More »