Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்!

தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் ஆழமான கரிசனை கொண்டவர்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், இதனை மீறி செயற்பட்ட ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தூக்கியெறியப்பட்டனர் என சுட்டிக்காட்டினார். ...

Read More »

சுமந்திரன் படுகொலை சதி விவகாரம் – ரி.ஐ.டி. நடவடிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைதுச் எய்யப்ப்ட்டுள்ள முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களில் ஒருவரான வேலாயுதம் விஜேய் குமார் என்பவரை மீள பயங்கரவாத புலனாய்வாளர்களின் (ரி.ஐ.டி.) பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பயங்கரவாத புலனயவுப் பிரிவின் வவுனியா அலுவலகம் ஊடாக கைது செய்யப்ப்ட்ட அவர் பொலிஸ் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்ப்ட்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் 20,21 மற்றும் 22 ...

Read More »

கால அவகாசம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றும் நாடகமே – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கை அரசிற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேலும் இரண்டுவருட கால அவசாகம் வழங்கப்படவேண்டுமா என்பதில் தமிழ் மக்கள் தெளிவுடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே இவ்வாறு இலங்கை அரசிற்கு போதுமாக அளவு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதாகம் மேலும் கால அவகாசம் வழங்க முற்படுவதானது இலங்கை அரசாங்கம் ஐ.நாவையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காகவே என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அவர்2015 ஆம் ஆண்டு ...

Read More »

அரசியலிலிருந்து ஒதுங்கிவிடத் தோன்றுகிறது -அனந்தி

அரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுவதாகத் தெரிவித்துள்ள அனந்தி சசிதரன் ஒருவரை அடிக்கவேண்டும் என்பதற்காக இவ்வாறு மோசமாக எழுதாதீர்கள் என்றும் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராக தான் எக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் பங்கேற்ற அனந்தி சசிதரனுக்கு மேடையில் பேச இடம் தரவில்லை என அவர் கண்டனம் வெளியிட்டதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை வைத்து சில அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துவதாகவும் அனந்தி கூறியதாக சில ஊடகங்கள் ...

Read More »

சாவகச்சேரி தற்கொலை அங்கி! இராணுவப் புலனாய்வாளர்களின் நாடகம்!

கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் நாள் சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து மைத்திரிபால சிறிசேனவால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் ...

Read More »

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாள்

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட நாள் 12-02-2009.தனக்கான பாதை எது தனக்குப் பொருத்தமான பணி என்ன என்பதை நன்கு பகுத்துணர்ந்தே சத்தியமூர்த்தி ஊடகம் என்னும் கருவியைத் தனதாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் எழுத்தின் மீதான உந்துதலால் அல்லது ஈர்ப்பினால் அவர் தனது ...

Read More »

மூடி மறைக்கப்படும் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் – அவுஸ்ரேலிய ஊடகம்

1983 தொடக்கம் மே 2009 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக போர்க் குற்ற மீறல்கள் இடம்பெற்றன என்பதை சிறிலங்காவில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் மறுத்தே வந்துள்ளன. பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து சிறுபான்மை தமிழ் மக்கள் பாரபட்சப்படுத்தப்படும் சம்பவமானது கொலனித்துவ காலத்திலிருந்து இடம்பெற்று வருகிறது. அதாவது இலங்கை பிரித்தானியாவின் கொலனித்துவத்திற்கு உட்பட்டிருந்த போது தமிழ் மக்களுக்குச் சார்பான தரப்பினருக்கு பிரித்தானியாவால் நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர், சிங்கள மொழி நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. ...

Read More »

எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!

இன்று(10) மட்டக்களப்பில்  தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு விவேகானந்தா மைதானத்தில் தற்போது  ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன்  நடை பெற்றுக்கொண்டுள்ளது.

Read More »

பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா ?

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது. வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இக்காலக்கெடு நிறைவடைகின்றது. இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இப்பன்னாட்டுக்குழுவின் அறிக்கை வெளிவரவிருக்கின்றது. அனைத்துலக ...

Read More »

மட்டு எழுக தமிழில் அனந்தி கலந்துகொள்ளத் தீர்மானம்!

மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பூ.லக்ஸ்மன் அவர்களுக்கும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் இடையில் நேற்று மாலை யாழ் நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் காணாமல் போனவர்களுக்கானதும் இறுதி யுத்த காலப்பகுதியில் படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான தீர்வையும் நீதியையும் வலியுறுத்தி எழுக தமிழ் ...

Read More »