Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7வது வருடாந்த தேசிய மாநாட்டுத் தீர்மானங்கள் 2017

தீர்மானம் 01 அரசியல் தீர்வாக இரண்டுதேசங்கள் இணைந்த ஒருநாடு வடக்கு கிழக்கை பாராம்பரிய தாயகமாக கொண்ட தமிழ் மக்கள் தனித்துவமான மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைக் கொண்டிருப்பதனால் ஒரு தேசமாக உள்ளனர். ஒரு தேசத்திற்குரிய மக்களுக்கு பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையும், தனித்துவமான இறைமையும் உண்டு. மக்கள் கூட்டம் என்பது சிறுபான்மை இன மக்களையும், தேசமாக உள்ள மக்களையும் குறிப்பதால் தமிழ் மக்களின் அரசியல் அந்தஸ்த்தினை கேள்விக்குட்படுத்தக்கூடிய வகையில் மக்கள் கூட்டம் என அழைப்பது பொருத்தமற்றது. தமிழ் மக்கள் தாம் ஒரு தேசம் என்பதற்கான ஆணையை ...

Read More »

“ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” மக்கள் குறைகேள் நிலையத்தை மைத்திரி திறந்து வைத்தார்!

எமக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த வடக்கு, தெற்கு மற்றும் வெளிநாடுகளில் உள்ள நிறைய பேர் சதி செய்கின்றனர். இதனை பேஸ்புக் ஊடாக அவதானிக்க முடியும். குறிப்பாக நான் பேஸ்புக் பார்ப்பதும் இல்லை. இது போன்ற விடயங்களை தொடர்ந்து பார்ப்பதால் ஒரு பயனும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழில் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று (4) சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வந்துவிட்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இன்று உங்கள் பிரதேசத்திற்கு வருகை ...

Read More »

ஐ.நாவில் சிறிலங்காவை உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்ட அமெரிக்கா!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான நிலைப்பாட்டை அமெரிக்கா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் பிரதிநிதி சிறிலங்காவை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டுக்கான முன்உதாரணமாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலர் எரின் பார்க்லே நேற்று உரையாற்றியிருந்தார். அவர் தனது உரையில், சிறிலங்கா குறித்த டொனால்ட் ட்ரம்ப் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் அதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. எனினும், ...

Read More »

அக்கினியில் சங்கமமானது புரட்சி பாடகரின் குரல்!

ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் ஈழத்தின் புரட்சிப் பாடகர் எஸ்.ஜி. சாந்தனின் பூதஉடல் இன்று மாலை இரணைமடுவில் அக்கினியுடன் சங்கமமானது. மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கத்தின் இறுதி நிகழ்வு இன்று(28) செவ்வாய்க்கிழமை அவரது கிளிநொச்சி விவேகானந்தநகர் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் கரைச்சி பிரதேச செயலக வளாகத்தில் பொது அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. இதனையடுத்து பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் மாலை தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் சாந்தனோடு பணியாற்றி ...

Read More »

பிரித்தானிய துணைத் தூதுவர் முல்லை.இராணுவத்தளபதியுடன் சந்திப்பு!

சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை, முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்துக்குச் சென்ற சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுடன் பேச்சு நடத்தினார். இந்தக் கலந்துரையாடலில், பிரித்தானியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஸ்ருவார்ட் அன்ட்ரூ போர்லன்டும் பங்கேற்றார். இதன் போது, பரஸ்பரம் ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, சிறிலங்கா இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், முல்லைத்தீவு ...

Read More »

தமிழர்கள் தமது விவகாரங்களை கையாள அனுமதிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற குழுவினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார். மேலும், இதன் போது, 30 வருடங்களாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் ...

Read More »

கேப்பாப்புலவு மக்களின் மண்மீட்பு போராட்டக் கதை – பிரசுரம் வெளியீடு!

கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்தநிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி கடந்த 22 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை இராணுவமுகாம் முன்பாக முன்னெடுத்துவருகின்றனர். இந்நிலையில் இந்த மக்களின் போராட்டத்தின் கதையை தாங்கிய பிரசுரம் ஒன்று இன்றையதினம் கேப்பாப்புலவு மக்களின்  போராட்டக்களத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இப் பிரசுரத்தினை “விதை குழுமம்”தாயாரித்திருக்கின்றது. இதனை  யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா போன்ற பிரதேசங்களிலுள்ள அமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இனிவரும் நாட்களில் இந்த  மக்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அழுத்தத்தை உருவாக்கும் வகையிலும் இப்பிரசுரம் தாயாரிக்கப்பட்டிருக்கிறது ...

Read More »

நில மீட்புக்காக போராடும் சிறார்கள்! பத்மினி சிதம்பரநாதன்

நில மீட்புக்காக போராடும் சிறார்கள் தாம்படும் அவலங்களை பாடல்களாக கோஷங்களாக கூறி அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன். கேப்பாப்பிலவு நில மீட்புக்காக சிறார்கள் கூட தாங்கள் படுகின்ற அவலங்களை மிகத் தெளிவாக பாடல்களாகவும் கோஷங்களாகவும் கூறி தங்கள் நிலங்களை விடுவிக்கும்படி அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எந்த ஒரு போராட்டத்திலும் சிறார்கள் தங்கள் அவலங்களை வெளிப்படுத்தியதில்லை. மக்களின் மனிதாபிமான பிரச்சினையை உணர்ந்து சிறுவர்களின் உணர்வை மதித்து அவர்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி ...

Read More »

பேரன்னை பார்வதி அம்மாவின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்

பார்வதி.. பார்வதிப் பிள்ளை பார்வதி அம்மா அண்ணையின் அம்மா அன்னை இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் ...

Read More »

மற்றொரு இரகசிய வதைமுகாம் இரகசியங்கள் அம்பலம்!

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு மே மாதம், தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளை நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு அழைத்திருந்தனர். மேஜர் பிரபாத் புலத்வத்த, சார்ஜன்ட் துமிந்த வீரரத்ன, சார்ஜன்ட் ...

Read More »