Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சருடன் வடகொரியா மூத்த அதிகாரி சந்திப்பு!

நியூயார்க் நகருக்கு வந்துள்ள வடகொரியாவை சேர்ந்த மூத்த அதிகாரியான கிம் யோங்-சோல், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர்  பாம்பியோ உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் திகதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட ...

Read More »

நல்லாட்சி அரசும் முன்னைய ஆட்சிக்கு ஈடானதே!

தமிழ் ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள் விடயத்தில், உண்மைகளைக் கண்டறிந்து, நீதியை நிலைநாட்டி, குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்துவதில் முன்னைய ஆட்சியாளர்களைப் போல இந்த நல்லாட்சி அரசும் மெத்தனமாகவும், பொறுப்பின்றியும், விட்டேத்தியாகவும், அசிரத்தையாகவும், பாரபட்சமாகவும், ஏனோதானோ என்ற மனப்பாங்கிலும் நடந்து வந்திருக்கின்றது என்ற பேரதிருப்தி எமக்கு உண்டு என யாழ்.காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. வித்தியாதரன் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழில்.இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது கடந்த திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல் ...

Read More »

யாழில் செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

காலைக்கதிர் பத்திரிக்கையின் செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்… காலைக்கதிர் பத்திரிக்கையின் பிரதேச செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்.ஊடகவியலாளர்களினால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டது . யாழில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது முன்தினம் அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து அதில் குறித்த செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.

Read More »

தமிழில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைகள்!

ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு  “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு . தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சி. பூர்வீக மக்களின் இன ரீதியான புறக்கணிப்பு, அவமானம், இயலாமை, களவாடப்படும் தலைமுறை, களவாடப்பட்ட தேசம், நிலம்,  அடையாள நெருக்கடி, ஒடுக்குமுறை….என்று விரிந்துசெல்லும் அவர்களின் பன்முகப் பிரச்சனைகளை உயிர்ப்புடன் முன்வைக்கும் கவித்துவம் ததும்பும் கவிதைகளை ஆழியாள் மொழிபெயர்த்துள்ளார். நன்றி- எஸ்பிஎஸ் தமிழ்சேவை

Read More »

ஜெமினி கணேசன் ஆவணப்படத்தில் சாவித்திரிக்கு எதிரான காட்சிகள்?

நடிகை சாவித்திரியின் நடிகையர் திலகம் படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது. சாவித்திரி கதையில் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாவித்திரியை மதுகுடிக்க வைத்து போதைக்கு ஜெமினி கணேசன் அடிமையாக்குவது போன்றும் காட்சி வைத்து இருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இதனை கண்டித்தார். தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை சாவித்திரி தமிழில் படமாக தயாரிக்க முன்வந்தபோது ஜெமினி கணேசன் தடுத்தார் என்றும், அப்போது நாயையும், வேலைக்காரர்களையும் ...

Read More »

கூகுள் சர்வர் குறைபாட்டை சுட்டிகாட்டிய சிறுவனுக்கு பரிசு!

உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்தஎஸ்க்வீயல் பெரேரா  என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார். இதையடுத்து அந்த குறைபாட்டை சரி ...

Read More »

மௌன ராகம் தொடரால் கிருத்திகாவின் கற்றல்?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் மௌன ராகம் என்ற நாடகத் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரங்களில் பலரின் மனதை வென்றுள்ளவர் வேலன் என்கிற கிருத்திகா. வேலன் என்று கூறினால் தான் இவரை அதிக பேருக்கு அடையாளம் தெரியும். மிகவும் பரப்பரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் கிருத்திகாவுக்குதான் முக்கிய பாத்திரம் என கூறலாம். இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், எனக்கு பெங்களூரில் பள்ளி படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இந்த நாடக தொடர் காரணமாக என்னால் அங்கு படிக்க முடியவில்லை. நாடக தொடர் ...

Read More »

அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் அப்படி நடந்து கொண்டார்களா?

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் அல் ஜசீரா தொலைக்காட்சி விவரணம் ஒன்றை வெளியிட்டது. அதில் அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் இருவர் match-fixing எனப்படும் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பணம் பெற்றுக்கொண்டு match-fixing-இல் ஈடுபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லையென Cricket Australia வின் தலைமை நிர்வாகி James Sutherland கூறியுள்ளார். இதேவேளை அவுஸ்திரேலிய வீரர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவுஸ்திரேலிய அணியின் Test ...

Read More »

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும்!

வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கட்டாயம் அழிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அதிபரும், ஜப்பான் பிரதமரும் தெரிவித்துள்ளனர். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ம் திகதி சந்தித்துப் பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே ...

Read More »

நாளை யாழில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கின்றனர் ஊடகவியலாளர்கள்!

யாழில் பிராந்திய ஊடகவியலாளரொருவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்த நிலையில் அந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண ஊடகவியலாளர்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் போராட்டமானது நாளை(30) காலை 10 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்புகளுக்கும் ஏற்பாட்டு குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Read More »