உருகுவே நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கூகுளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டியதால், அவருக்கு கூகுள் நிறுவனம் 24 லட்சம் ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது. கூகுள் தனது குறைபாடுகளை சரி செய்து கொள்வதற்காக அவ்வப்போது சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன் படி உருகுவே நாட்டைச் சேர்ந்தஎஸ்க்வீயல் பெரேரா என்ற 17 வயது சிறுவன், கூகுள் சர்வர்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக் காட்டி இதன் மூலம் ஹெக்கர்கள் நுழைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து அந்த குறைபாட்டை சரி செய்த கூகுள் நிறுவனம், பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்த சிறுவனுக்கு 24 லட்ச ரூபாய் பரிசாக கொடுத்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal