Tag Archives: ஆசிரியர்தெரிவு

அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள பொன்சேகா!

ஜனாதிபதியின் வாக்குறுதியின் படி எதிர்வரும் 3 மாதக் காலப்பகுதியில் சிங்கராஜா வனத்தில் உள்ள இரண்டு யானைகளுக்கும் இடமொன்று வழங்கப்படாவிட்டால் தாம் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக வனவிலக்கு அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா மற்றும் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் தெரிவித்துள்ளனர். ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்த போது அமைச்சர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

Read More »

உலகின் அதிவேகமான கணினி!

உலகின் மிக அதிவேகமான ஒரு நிமிடத்தில் 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளை செய்யும் திறன் கொண்ட சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர்கம்ப்யுட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர்கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது. அறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் பில்லியன் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும். ஒரு நிமிடத்திற்கு 2 ...

Read More »

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி முதலில் இருந்தே ஆஸ்திரேலியா பந்து வீச்சை பதம் பார்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும்  அடித்து ...

Read More »

யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சி!

யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்கள் இருளென்பது குறைந்த ஒளி என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியையும், விவரணப்படங்கள் திரையிடலையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தி இருந்தனர். ஊடகக் கற்கைகள் மாணவர்களது தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டன. குறித்த ஒளிப்படங்கள் யாவும் இயற்கை ஒளியமைப்பைப் பயன்படுத்தியே பதிவுசெய்யப்பட்டவை என்பதுடன், மக்களின் பண்பாடு, பொருளியல், சமூக வாழ்க்கை, சுற்றுச் சூழல் என்பவை இவற்றின்வழி வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ...

Read More »

ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மைத்திரியிடம் கையளிப்பு!

“சிறுவர்களைப் பாதுகாப்போம் ” தேசிய செயல்திட்டம் தொடர்பான  சிறிலங்கா ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டில் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்துப் போராட்டங்களை ...

Read More »

விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வாட்ஸ்அப்!

விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக ...

Read More »

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தினம்!

ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். ஜுன் 21-ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ...

Read More »

‘‘மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக பார்க்கிறேன்’’ !-சூர்யா

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சூர்யா விழாவில் கலந்து கொண்டு 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். திண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:– கல்வி, ஒழுக்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தவறாக போகாது. அகரம் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பறக்கும் டாக்சி சேவை!

அவுஸ்திரேலியாவில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிட்னியிலிருந்து மெல்போர்னுக்கு அல்லது மெல்போர்னிலிருந்து சிட்னிக்கும் அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில், இந்த சேவையை அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து 5 ஆண்டுகளில் அதாவது எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என ...

Read More »

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை!

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிலையில், தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தை ஏற்படுத்தும் 21வது திருத்தத்தை கொண்டுவருவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More »