Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த காணிகள் விடுவிக்கப்படுமா?

சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்திருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் பின்தங்கிய கிராமிய பெருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் படையினர் வசமிருந்து வருகின்ற பல காணிகளை விடுவிக்கும் வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக அண்மையில் கும்புறுமுலையில் மூன்று தசாப்த காலமாகப் இராணுவம் ஆக்கிரமித்திருந்த 30 ஏக்கரிற்கு மேற்பட்ட தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் இராணுவ முகாம் அமைந்திருக்கும் காணிகளையும் விடுவிப்பதற்காக படைத்தரப்பினருடன் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தப்பட்டு வருகின்றன. ...

Read More »

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 478 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் ஐந்து பேர் தடுப்பூசி போடவில்லை.  தொற்றினால் ஏழு பேர் இறந்துள்ளார்கள். COVID-19 தொற்றின் அறிகுறிகளைக் கொண்டுள்ளவர்கள், தொற்று அதிகமாகப் பரவியிருக்கும் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சோதனை செய்வதற்கு 320 டொலர் மானியம் கிடைக்கலாம்.  மானியம் பெறுவதற்கு, அவர் தொழில் புரிபவராகவும் 17 வயதிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும். தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் மற்றும் பிற வருமான ஆதரவுக்குத் தகுதியற்றவர்கள், இப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ...

Read More »

அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரிக்கை

பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளை உள்வாங்குமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எழுத்துப்பூர்வமாக இக்கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 60,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன, எனவே வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுடன் ஆட்சேர்ப்பு செயல்முறையை முடிக்குமாறு இது தொடர்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

Read More »

கவலை கொண்டார் மலாலா

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது.  பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார். இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் ஒரு வார கால ஊரடங்கு அமல்

ஆஸ்திரேலியாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலியா தற்போது 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்களை டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. முக்கியமாக, நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னியில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அங்கு தொடர்ந்து 7-வது வாரமாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் ...

Read More »

‘கொரோனாவில் அரசியல் வேண்டாம்’ – சி.வி வலியுறுத்தல்

கொரோனாவைக் காரணம் காட்டி, அரசியல்வாதிகள் ஈடுபடும் அரசியல் செயற்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்கால கொரோனா நிலைவரம் தொடர்பில், இன்று (15) அனுப்பி வைத்துள்ள  ஊடக அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போது மிகவும் ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது. தினசரி 100 – 150 வரை உயிரிழப்புக்கள் இலங்கையில் ஏற்படுகின்றது. எனவே இலங்கையிலுள்ள சகல மொழிபேசும், சகல மதஞ் சார்ந்த எல்லோரும் கொரோனாவின் ...

Read More »

சுகாதார வழிகாட்டல்கள் சட்டமாக்கப்படவுள்ளன – இரு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் சில வழிகாட்டல்களை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

சிட்னி வாழ் தனி நபர்களும் தனிமைப்படுத்தல் விதிகளும்

சிட்னி பெரு நகரில் தனியாக வாழ்பவர்கள் விருந்தாளி ஒருவரை மட்டும் வீட்டிற்கு வர அனுமதிக்க முடியும். ஜூலை 31ஆம் தேதி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் இந்தக் கட்டுப்பாடு, தனியாக வாழும் ஒருவர் தன்னைப் பார்க்க வருவதற்காக ஒருவர் பெயரைப் பரிந்துரைக்க முடியும். அவர் குடும்ப அங்கத்தவராகவோ அல்லது நண்பராகவோ இருக்கலாம். ஆனால், பரிந்துரைத்து அனுமதி பெற்ற பின்னர், அவரை மாற்ற முடியாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கொரோனா வைரஸ் முடக்க நிலையை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடித்திருப்பதாக NSW மாநில அரசு ...

Read More »

சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த நபர் கைது!

சைனோஃபாம் தடுப்பூசிகளை 2,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் லுனாவ வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். 50 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொவிட் தடுப்பூசி செலுத்தும் போது வழங்கப்படும் அட்டையை தயாரிப்பதற்காக பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. அத்துடன், குறித்த சந்தேக நபர் மொரட்டுவ காவல்நிலையத்தில ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More »

‘பாலியல் தொழில் குற்றமல்ல’- விக்டோரியாவில் சட்டம் கொண்டுவரப்படுகிறது!

பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஒரு குற்றச்செயல் அல்ல என்பதாக விக்டோரியாவில் சட்டமாற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்படி விக்டோரியாவின் ஏனைய தொழில்துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் உரிமைகள் பாலியல் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவுள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவருதல், பாலியல் தொழில் குறித்த பார்வையை மாற்றுதல், பாலியல் தொழிலாளர்களுக்கான சுகாதார மற்றும் நீதித்துறை சேவைகளை மேம்படுத்தல் போன்ற பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும் என விக்டோரிய அரசு இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. பாலியல் தொழில் ...

Read More »