Home / Tag Archives: ஆசிரியர்தெரிவு (page 30)

Tag Archives: ஆசிரியர்தெரிவு

சிறிலங்கா அரசாங்கம் ஏன் இப்படி செயற்படுகிறது?

வடக்கில் கொலைகார கும்பலால் பொதுமக்கள் பாரதூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளதா என தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வாக்களித்த அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இவ்வாறான கொலையாளிகளை கைது செய்யும் விடயத்தில் மந்தகதியில் செயற்படாமல் துரிதமாக செயற்பட்டு நாட்டில் குறிப்பாக வடக்கில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ...

Read More »

கோட்டாபய விடுவிக்கப்பட்டார்!

டி.ஏ. ராஜபக்ஷ ;ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து ; 6 பிரதிவாதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே கடந்த 2019 நவம்பர் 21 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலரும், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே நேற்று ஏனைய ...

Read More »

இளம் கவிஞரை தடுத்து வைப்பது சட்ட விரோதமானது!

நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக ; கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞரை, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் ; தடுத்து வைக்க, ஜனாதிபதி கையெழுத்திட்ட தடுப்புக் காவல் உத்தரவானது சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ; ...

Read More »

மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது

மன்னார் – மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழா திருப்பலி மூன்று மொழிகளிலும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இன்று காலை 6.15க்கு இந்த திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். இதனையடுத்து திருச் சொரூப ஆசியும் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். கொவிட்-19 பெருத்தொற்று காரணமாக பக்தர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோருக்கான அனுமதி முற்றாக மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More »

‘ முன்னே 20 வரும் பின்னே பஷில் வருவார்’

நாடாளுமன்றத்துக்கு பஷில் ராஜபக்‌ஷ  வருவது எமக்கொன்றும் புதுமையான விடயமல்ல எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார   அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் வந்தபோதே  பஷில் வருவாரென்று தெரிந்துக்கொண்டோம் என்றார். எதிர்க்கட்சித்  தலைவர் அலுவலகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், அரசாங்கத்தில் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷவைப் பற்றி  கதைப்பதற்கு கூட யாருமில்லை என்பதால் சேர் பெயிலென ...

Read More »

ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம் 72 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது .இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை குடிவரவு அமைச்சர் Alex Hawke அண்மையில் வெளியிட்டிருந்தார். கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு குடியுரிமை விண்ணப்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால் இதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும், ...

Read More »

கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் ...

Read More »

தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, தங்களின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக முடக்க நினைப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிதாக விதிக்க திட்டமிடப்பட்டுள்ள விதிகளின் படி, தொண்டு நிறுவனங்கள் அத்துமீறல் அல்லது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அந்நிறுவனங்கள் வரி விலக்கு நன்கொடையினை பெற முடியாது எனப்படுகின்றது. உதாரணத்திற்கு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் நடைப்பாதையில் நின்று ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக ...

Read More »

எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களில் எனது பங்களிப்பு காரணமாக அமைச்சர்கள் என்னையும் எனது குடும்பத்தவர்களையும் தாக்குவார்கள் என அச்சமடைந்துள்ளேன் என அசேலசம்பத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தொடர்பான விபரங்களை பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை என குறிப்பிட்டுள்ள ...

Read More »

அபுதாபி பாலைவன பகுதியில் இந்திய தம்பதியின் செயல் பாராட்டுக்குரியது

ரசாயன கலப்பில்லாத காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை பெற வேண்டும் என தீர்மானித்த இந்திய தம்பதியின் செயல் பாராட்டுக்குரியது. இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அத்வைதா சர்மா மற்றும் பிராசி ஆகியோர் துபாயில் வசித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் துபாயில் இருந்து அபுதாபிக்கு வேலை காரணமாக மாறிச் சென்றனர். வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை தாங்களே வளர்க்க திட்டமிட்டனர். இதனால் வீட்டில் சிறு, சிறு செடி, கொடிகளை வைத்து ...

Read More »