கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தவிர, நாட்டில் ஒரு ஜனநாயக நெருக்கடி நிலவுவதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் பல நெருக்கடிகள் உள்ள நிலையில், கொவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி என்பன பிரதானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் சமூக ஊடகங்கள் உட்பட பல சிக்கல் நிறைந்த பகுதிகள் ஒரு ஜனநாயக சமூகமாக இணைந்து வாழும் போது தவறான தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை, பொருளாதாரத் துறை மற்றும் தகவல் துறையில் முன்னேறுவதில் சவால்கள் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.