New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,288 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மாநிலத்தில் தடுப்பூசியின் முதல்சுற்றை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை இன்றுடன் 70 சதவீதமாகிறது.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ‘வெளியில் உடற்பயிற்சி செய்ய ஒரு மணி நேரம் மட்டும்’ என்ற வரம்பு நீக்கப்படுகிறது, மற்றைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
Bega, Cooma, மற்றும் Illawarra Shoalhaven Bomaderry ஆகிய இடங்களில் கழிவு நீரில் கொரோனா வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal