Tag Archives: ஆசிரியர்தெரிவு

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டை பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேனும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான ...

Read More »

வாழ்க்கை துணையின் கரம் பிடித்தார் கல்வி போராளி மலாலா

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்த மலாலா, 2020ம் ஆண்டு தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக பகிரங்கமாக பேசியதற்காக, தலிபான் பயங்கரவாதிகள் அவர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மலாலா, பல மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறினார். பிறகு, தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த மலாலா, பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து ...

Read More »

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

11 இளைஞர்களைக் கடத்தி கப்பம் கேட்டு காணாமல் ஆக்கியதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் நீக்கியதற்கு எதிராக காணாமல் போன வர்களின் பெற்றோர் உள்ளிட்ட இளைஞர்கள் குழு தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) நிராகரித்துள்ளது. வழக்குத் தொடரவும் வாபஸ் பெறவும் சட்ட மா அதிபருக்கு அதிகாரம் உள்ளது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழுவினால் இந்தத் தீர்ப்பு ...

Read More »

வேதனையில் ஆஸ்திரேலிய குடும்பங்கள்

வரும் பிப்ரவரி 2022 வரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்குள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களோ ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களொ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனும் அறிவிப்பு குடும்பங்களை பிரிந்துள்ள ஆஸ்திரேலியர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 90% சதவீதத்தை எட்டிய பின்னர் தான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் அம்மாநிலத்தின் Premier Mark McGowan தெரிவித்துள்ளார்.

Read More »

விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை

விண்வெளி நிலையத்திற்கு சென்ற 2-வது வீராங்கனையான வாங் யாபிங், முதன் முதலில் விண்வெளியில் நடந்த முதல் சீன வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இங்கு சில வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணிகளை செய்து வருகிறார்கள். அதில் வாங் யாபிங் என்ற பெண் வீராங்கனையும் ஒருவர். நேற்று இரவு அவர் விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியே வந்து விண்வெளியில் சிறிது தூரம் நடந்தார். அவருடன் தலைமை விண்வெளி வீரர் ஷாய் சிகாங்கும் ...

Read More »

அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது சிதைக்கும் செயல்

மக்கள் எதிர்பார்ப்பை யதார்த்தமாக்கி பொதுத் தேசிய கொள்கைக்குள் நாட்டை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சி அமைப்பது அரசியலமைப்பை சிதைக்கும் செயலாகும் எனவே, கலந்துரையாடல்களின் பின்னர் முடிவு பிரபலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் கலந்துகொள்வது அவசியம் என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இன்று எமது நாட்டில் கூட்டணி அரசாங்கம் ஒன்றே உள்ளது. இக்கூட்டணி அரசாங்கத்துக்குள் பல கட்சிகள் ...

Read More »

சஹ்ரான் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாதிமா ஹாதியாவை, எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி தொடர்பான வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த வழக்கை கல்முனை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியதுடன், குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி ...

Read More »

ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது.

Read More »

“அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார்”

அருட்தந்தை சிறில் காமினி தற்சமயம் கைது செய்யப்படமாட்டார் என,  சட்டமா அதிபர், உயர்நீதிமன்றுக்கு  அறிவித்துள்ளார். இது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று(08) இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர், இந்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு ...

Read More »