Tag Archives: ஆசிரியர்தெரிவு

தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்!

அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தொடர்பில் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்த மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தால் ...

Read More »

உருமாறிய கொரோனாவை தடுக்கும் பைசர் தடுப்பூசி- ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டுக்கு வந்துள்ள பைசர் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது. சீனாவின் வுகானில் தோன்றி உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவுக்கு எதிராக தற்போதுதான் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளன. அந்த வைரசின் அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதற்குள் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்கள் பரவுவது கண்டறியப்பட்டது. இதில் இங்கிலாந்து வைரஸ் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரசுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் வேலை செய்யுமா? என்ற சந்தேகம் மருத்துவ நிபுணர்களிடம் இருந்து ...

Read More »

அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்த ஈனச்செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது. இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் அழித்துள்ளார். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிப்பு

யாழ் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்துஅழிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ...

Read More »

மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்க திட்டம்

மார்ச் மாத இறுதிக்குள் நான்கு மில்லியன் அவுஸ்திரேலிய மக்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் தி;ட்டம் குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். பெப்ரவரி நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார். மார்ச் மாத இறுதிக்குள் 4 மில்லியன் பேருக்கு மருந்தினை வழங்கும் திட்டம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். முதலில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலில் பணியாற்றுபவர்களிற்கும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கையாள்பவர்களிற்கும் சுகாதார பணியாளர்களிற்கும் முதியோர் மற்றும் அங்கவீனர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா சமூகத்திற்குள் பரவுகின்றதா என அச்சம்

புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் உருவாகியுள்ள சமூக பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேர்ன் மூன்று நாட்களிற்கு முடக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பிரதமர் அனஸ்டேசியா பாலஸ்சே அறிவித்துள்ளார். ஹோட்டலின் தனிமைப்படுத்தல் பணியாளர் பி117 என்ற வகை கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் புதிய முடக்கலை அறிவித்துள்ளார். அவருடன் தொடர்பிலிருந்த 179 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட வகை வைரஸ் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களிடம் முன்னர் காணப்பட்ட போதிலும் சமூகத்தில் காணப்படவில்லை. புதிய கொரோனா வைரஸ் அதிகளவு தொற்றும் தன்மை ...

Read More »

71 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது

காலி சிறைச்சாலையின் 39 பெண் கைதிகளுக்கு இன்று கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் கிளிநொச்சியிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு நாளை கொண்டு செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இதேவேளை போகம்பர சிறைச்சாலையின் மேலும் 32 பெண் கைதிகளுக்கு கொவிட்-19 தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதுடன் அவர்கள் கல்லெல்ல கொவிட்-19 சிகிச்சை நிலையத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Read More »

போலி வீசா வைத்திருந்த மூவர் கைது

போலி வீசா வைத்திருந்த மூவரை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப் பட்டுள்ள தாக தெரியவந்துள்ளது. போலியான வீசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்ல முற்பட்ட 03 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர்கள் குடிவரவு மற்றும் குடி யகழ்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள தாகத் தெரியவந்துள்ளது.

Read More »

நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுள்ள இவன்கா அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவன்காவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் அதனை நீக்கியுள்ளார். டிரம்பின் ஆதரவாளர்களால் ...

Read More »

வடக்கில் இன்று 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி: மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமகாண சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தைச்  சேர்ந்த 7 பேருக்கும் யாழ்ப்பாணம் மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் சங்கானையைச் சேர்ந்த ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ தேவேளை யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளதாகவும் ...

Read More »