நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டார் இவன்கா டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என குறிப்பிட்டுள்ள இவன்கா அவர்களை வன்முறையில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ அல்லது எங்கள் சட்ட அமுலாக்களை அவமதிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இவன்காவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை தொடர்ந்து அவர் அதனை நீக்கியுள்ளார்.


டிரம்பின் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் காணப்பட்ட செய்தியாளர் ஜக் சேர்மன் இவன்கா டிரம்ப் ஆர்ப்பாட்டக்காரர்களை  தேசப்பற்றாளர்கள் என குறி;ப்பிட்டமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 


அமெரிக்க தேசப்பற்றாளர்களா?நான் இங்கு முடக்கப்பட்ட நிலையில் உள்ளேன்,பாராளுமன்றம் அத்துமீறப்பட்டுள்ளது, துப்பாக்கிகள் காணப்படுகின்றன பயன்படுத்தப்படுகின்றன நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை கலகத்தில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என அவர் அழைத்துள்ளமை குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பப்பட்டதை தொடர்ந்து இவன்கா இல்லை அமைதியான ஆர்ப்பாட்டம் தேசப்பற்றை வெளிப்படுத்துகின்றது,வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது  அதனை கடுமையாக கண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.