Tag Archives: ஆசிரியர்தெரிவு

இளஞ்செழியன் மீதான தாக்குதல்: சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கமைய, இவரை ஒக்டோபர் 16ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22ம் திகதி நல்லூரில் வைத்து இளஞ்செழியன் சென்ற வாகனத்தை மறித்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, இதனுடன் ...

Read More »

சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்களை தவிர்ந்த ஏனைய ஏழு எதிரிகளுக்கும்  சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளடக்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினாலேயே மேற்படி தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. 2 ஆவது எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4 ...

Read More »

தமிழீழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு வேண்டும்: வை​கோ

தமிழீழம் அமைய, பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என்று, மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிஸின் பிரதான அரங்கத்தில், வைகோ உரையாற்றியதாவது, “இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, 2016 நவம்பர் 27ஆம் திகதியன்று, ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ்ஸின் உதவி நாடி,  ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். “2015ஆம் ...

Read More »

ஒற்றையாட்சி! – இடைக்கால அறிக்கையின் சுருக்கம்!

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது. வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்கு முன்­மொ­ழிந்­துள்­ளது. காணிப் பயன்­பாட்டு அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்க யோசனை முன்­வைத்­துள் ளது. பகி­ரப்­பட்ட ...

Read More »

எதிர்வரும் மார்ச் 30க்குள்ளேயே மாகாண, உள்ளூராட்சித் தேர்தல்கள்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளேயே மூன்று மாகாணசபைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடைபெறும் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், ‘சிலர் குறைகூறுவதைப் போன்று சட்டங்கள், பிரேரணைகள் மூலம் தேர்தலைப் பிற்போடமுடியாது. மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூராட்சித் தேர்தல்களும் எதிர்வரும் மார்ச் 30இற்குள் நடைபெறும். மாகாணசபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ...

Read More »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து பெரும் எழுச்சியுடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பொது மக்கள், அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு ...

Read More »

தலைவர் பிரபாகரன் எங்கே? – திருமதி தமிழ்செல்வன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக, விடுதலைப்   புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு எனது பிள்ளைகளுடன் என்னையும் ...

Read More »

தவறு செய்யவில்லை எனில் தண்டனை குறித்து அஞ்ச வேண்டியதில்லையே!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இந்தப் பணியகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியினர் கூறுகின்றனர். தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று இதயபூர்வமாக நம்புகின்ற எந்த படைவீரரும், இதுபற்றி ...

Read More »

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு கூட்டமைப்பு பச்சைக்கொடி!

20ஆவது திருத்தச்சட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார். “20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில ஐயங்களை எழுப்பியிருந்தது. அதாவது மாகாணசபைகள் 5 வருடங்களுக்கு முன் கலைக்கப்பட்டால் மிகுதி காலத்தை நாடாளுமன்றம் பொறுப்பேற்பது என்பதை நாங்கள் எதிர்தோம். அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் தீர்மானத்தை நாடாளுமன்றம் ...

Read More »

20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை ஆதரவு

இலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More »