Tag Archives: ஆசிரியர்தெரிவு

இன அடக்குமுறைக்கெதிராக ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

இன அடக்குமுறைக்கெதிராக போராடுவதற்காக எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழுவின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்தினைப் பிரதிநித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்று அண்மையில் யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்த தமிழ் மக்கள் பேரவை அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும் ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? – சம்பந்தன்

சிறீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (23)  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரும் வெள்ளியன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார். ...

Read More »

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும்

ராஜபக்ஸ குடும்பத்தின் பலரது பதவிகள் பறிபோகும் சந்தர்ப்பம் உள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார். கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,கட்சிக்கு எதிராக செயலாற்றும், கட்சியின் சட்டத்திட்டங்களை மீறும் ராஜபக்ஸ குடும்பத்தின் பல பதவிகள் பறிக்கப்படும். நாம் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து யாரையும் நீக்க வில்லை. ஆனால் அவர்களின் பதவி மட்டும் பறிபோயுள்ளது எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டார். மேலும், புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க ஒன்றிணைந்த எதிர் ...

Read More »

பரமற்றா நகரில் தமிழரின் பொங்கல் விழா

தூரத்தே நின்று வாசலை நோக்கும்போதே வாழைமரங்கள் இரண்டு இலைகளை அசைத்து வாருங்கள் இங்கே என்று சைகை காட்டியது. என்ன இது வாழைகள் என்றெண்ணி கிட்டே நகர்ந்தால் அதன்கீழ் அழகிய கோலம் கோலத்தின் நடுவே அழகுற அமைந்த நிறைகுடமும் குத்து விளக்கும் ஆச்சரியமூட்டி மனதை நிறைத்து பொங்கல்விழா என்றுகட்டியம் கூறியது. நிற்குமிடம் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமா என்றொரு எண்ணத்தை ஊட்டியது. அப்போதுதான் தெரிந்தது இது நம்மவர் நிகழ்த்தும் பொங்கல்விழா என்று. இன்சொல் பேசி இனிமை பகிர பொங்கல் உண்டு கூடி மகிழும் நல்லநாள் பொங்கல்நாள் என்பது ...

Read More »

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை: முதலமைச்சர் ஆதங்கம்!

வடக்கில் முதலமைச்சர் நிதியத்தை திறக்க முடியவில்லை. வடமாகாணத்தின் நிதியம், கொடைகள் மத்திய வங்கியின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை(03) மன்னார் உள்ளக விளையாட்டு அரங்கை திறந்து வைத்தபின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நான் போதைப் பொருள் தடுப்புக் கூட்டமொன்றுக்கு கொழும்பு சென்றிருந்தேன். நண்பரும் சட்டத்தரணியுமான அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களுடன் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்பொழுது அங்கு பேசிய அத்தடுப்பு நிறுவனத்தின் தலைவர் வடமாகாணம் விரைவில் மற்றைய ...

Read More »

அரசுகளின் நீதி – நிலாந்தன்

அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால், அதேசமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே, மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலகப் பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில், மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் ...

Read More »

With The Facts In Hand UN Must Establish An International Independent Judicial Process: 59 HR Professionals

Fifty nine human rights activists and human rights professionals around the world have called upon the United Nations Human Rights Council to establish an independent international judicial process to investigate and prosecute war crimes committed in Sri Lanka’s civil war. We publish below the statement in full; An open letter from a group of human rights professionals eminent citizens to member states ...

Read More »

வன்னியில் இருப்பதைப்போன்று மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த கிணறு சுமார் இருபது அடி ஆழம் கொண்டிருப்பதாகவும், இந்த கிணற்றின் உட்சுவர் கருங்கற்களினால் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பத்மநாதன் தெரிவித்தார். இந்த கிணற்றின் கருங்கற்களில் தமிழ் பிராமி எழுத்துக்களில் “மணி ...

Read More »

Chief Minister Wigneswaran rejects domestic investigation in new NPC resolution

Questioning the legal possibilities of conducting a credible investigation within the domestic sphere of the Sri Lankan Constitution and pointing out other hurdles within the SL State system, C.V. Wigneswaran, the Chief Minister of Northern Provincial Council (NPC) on Tuesday passed a resolution rejecting the domestic process being proposed by the USA and other powers. In ithe new resolution, the ...

Read More »

தமிழரசுக் கட்சியின் செயல் நியாயமானதா….?

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான நியமனங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு- தோல்வியுற்ற துரைரட்ணசிங்கத்துக்கும், மற்றொன்று வன்னி மாவட்டத்தில் வெற்றிவாய்ப்பை இழந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பேருமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்கள். இதனால், இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் தமிழரசுக் கட்சி தமதாக்கிக் கொண்டு, ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கு அநீதி ...

Read More »